அன்பார்ந்த தமிழர்களே! தமிழ்தேச மக்களே!
தேர்தலில் நம் நிலை என்ன? ஓட்டுப் போடலாமா? காங்கிரசை மட்டும் எதிர்க்கலாமா? 49 ஓவைப் பயன்படுத்தி வேட்பாளர் புறக்கணிப்பை மேற்கொள்ளலாமா? வாக்களிக்க மறுக்கலாமா? வாக்களிக்க மறுத்துவிட்டு என்ன செய்யலாம்? என பல்வேறு வினாக்கள் நம் முன்னே உள்ளன. இவற்றைக் குறித்து ஒவ்வொன்றாக பரிசீலிப்போம்.
தமிழ்நாடு, புதுவைச் சட்டமன்றத்தின் தகுதி
தமிழ்நாடு, புதுவைச் சட்டமன்றம் எவ்வித இறையாண்மையும் (தன்னைத்தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை) அற்றது. நமது சட்டமன்றங்கள் தீர்மானங்கள் இயற்ற முடியுமே ஒழிய அதற்கு சட்டங்கள் இயற்றும் அதிகாரம் கிடையாது. தீர்மானங்கள் இந்திய அரசின் ஒப்புதல் பெற்றால்தான் சட்டமாக முடியும் என்ற நிலையில் உள்ளது. கல்வியில், வேலைவாய்ப்பில், தன்னுடைய மக்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு வழங்க உரிமை அற்றது. தன் ஊரிலுள்ள கல்முதலாளிக்கு (கடவுளுக்கு) யார் பூசை செய்யலாம் என்று சொல்வதற்குக் கூட திறனற்றது.
1956ல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வந்தும் அதை அமுல்படுத்தும் வக்கற்றது. தன் பெயரை (தமிழ்நாடு) தனக்குச் சூட்டிக் கொள்ளவே பல ஆண்டுகாலம் போராடியது தமிழ்நாட்டிலுள்ள நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வலிமையற்றது. தமிழ்நாட்டின் எல்லைகளை தீவுகளை தனக்குத் தெரியாமலேயே இழந்தது. சட்டமன்றத்தில் ஈழ தமிழர் படுகொலையை தடுக்க கோரி ஒருமனதாக நிறைவேறிய தீர்மானத்தை செயல்படுத்த அதிகாரமற்றது, சிங்கள அரசோடு கைகோர்த்து படுகொலை நிகழ்த்திய இந்திய அரசை கேள்வி கேட்க வக்கற்றது. தமிழ்நாட்டில் புதுவையில் யாரும் வரலாம். சுரண்டலாம், சூறையாடலாம், அதிகாரம் செலுத்தலாம். தடையின்றித் திரும்பிச் செல்லலாம். அதைத் தடுக்கும் ஆற்றலற்றது, கொடியற்றது, படையற்றது, தனக்கான கொள்கையற்றது இதுதான் தமிழக புதுவைச் சட்டமன்றம்.
இத்தகைய உரிமையற்ற அரசை தேர்ந்தெடுக்கத்தான் நமது நாலரை கோடி வாக்குகள் கோரப்படுகின்றது. நமது நாலரை கோடி வாக்குகளும் ஆளுநரின் ஒரு கையெழுத்திற்கு நிகர். ஆம் இந்த உரிமையற்ற சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க நாலரை கோடி வாக்குகள் தேவைப்படுகின்றது. ஆனால் அதை கலைக்கவோ ஆளுநரின் ஒரு கையெழுத்தே போதுமானது. சிந்தித்துப் பாருங்கள். யார் பலசாலி என்று. இதுவொன்றும் நடக்காத செயலல்ல. இதுவரை எண்பதிற்கும் மேற்பட்ட முறைகள் இந்தியாவிலுள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மூன்று முறைகள் சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதுதான் நமது சட்டமன்றத்தின் குடியாட்சி (சனநாயக) லட்சணம்.
தமிழ்நாடு தன் உரிமையை இழந்து கிடப்பதை மறைப்பதற்கும் அதற்கு நம்மை ஒப்ப வைப்பதற்குமே இந்த குடியாட்சி (சனநாயக) நாடகம். இதுவா குடியாட்சி? இதற்காகவா உங்கள் வாக்கு?
தேர்தல் முறையின் குடியாட்சித் தன்மையும் தகுதியும்:-
நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றம் எவ்வித அதிகாரமும் அற்றதாக இருக்கிறது. அந்த அதிகாரமற்ற சட்டமன்றத்தைக் கூட கேள்வி கேட்க கட்டுப்படுத்த திருப்பி அழைக்க மக்களுக்கு அதிகாரம் உள்ளதா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியிலும் தேர்தலுக்கு பின்பு அதன் எதிர்க் கூட்டணியிலும் செயல்பட்டால் நம்மால் கேள்வி கேட்க முடியுமா? முடியாத போது இதை எப்படி குடியாட்சி (சனநாயக)க் குடியரசு என்று கூற முடியும். இவையெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் இவர்கள் ஊழல் புரிய முடியுமா? நம்மை கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடியுமா? நமக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்கத்தான் முடியுமா? அப்படி ஒரு நிலை தான் தோன்றுமா?
கடந்த 60 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் அரசமைத்தக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் பெற்ற மொத்த வாக்குகள் ஏறக்குறைய வெறும் 35 விழுக்காட்டிற்கும் குறைவே. ஆக 65 விழுக்காடு மக்களின் விருப்பத்திற்கு எதிரான அரசுதானே அமைக்கப்பட்டது. இதற்குப் பெயர் குடியாட்சியா? 234 தொகுதிகளில் 118 தொகுதியை வென்றவன் ஆட்சியமைத்தால் இவர்கள் வெல்லாத 116 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் இல்லாது போகிறதே இது குடியாட்சியா?
நாம் அதிகாரமற்ற சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுத்தாலும், மக்களுக்கு அதன்மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றாலும், உண்மையில் இந்த சட்டமன்றத்திற்கு வெளியே தான் உண்மையான அதிகாரம் செயல்படுகின்றது. மூன்றுமுறை தமிழ்நாட்டுச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட போது இங்கு அரசு செயல்படவில்லையா? எல்லாம் செயல்பட்டது என்றால் நாம் தேர்வு செய்த சட்டமன்றம் வெறும் முகமூடி தானே.
ஆக உண்மையான அரசு இயந்திரமான நீதித்துறை, நிர்வாகத்துறை, படைத்துறை, பல்கலைக்கழகம், மின்சார வாரியம் முதலிய அரசின் உயர் அமைப்புகளையோ அல்லது ஆரம்பநிலை அதிகாரங்களாக செயல்படக் கூடிய கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை உதவி ஆய்வாளர், கடைநிலை நீதிபதி முதலிய இவர்கள் யாராவது நமக்கு கட்டுப்பட்டவர்களா? இவர்களை நாம் கேள்வி கேட்க முடியுமா? இவர்கள்தான் நமக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களா? இவர்களை நாம் தேர்ந்தெடுக்கத்தான் முடியுமா?
இவர்களை கேள்வி கேட்கவோ, கட்டுப்படுத்தவோ, தேர்ந்தெடுக்கவோ நமக்கு உரிமை இல்லாதபோது இவை மக்களாட்சியா? அல்லது அதிகார வர்க்கத்தின் ஆட்சியா? இவர்கள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் இவர்களால் கையூட்டுப் (லஞ்சம்) பெற முடியுமா? ஊழலில் திளைக்க முடியுமா? கரவுக் கொலைகள் (என்கவுண்டர்) நிகழ்த்த முடியுமா? தங்கள் விருப்பங்களுக்கேற்ப தீர்ப்பளிக்க முடியுமா? பார்ப்பனர்கள் அதிகார வர்க்கத்தின் ஆட்சி செலுத்த முடியுமா? இப்படியான நிலை தான் தோன்ற முடியுமா?
ஆக இத்தேர்தல் முறை பலவகையிலும் சனநாயகமற்று இருப்பதால் இதை போலி குடியாட்சி (சனநாயகம்) தேர்தல் முறை என்றே அழைப்போம். இந்த போலியான குடியாட்சித் தேர்தல் முறைக்கு வாக்களிக்க மறுத்து உண்மையான தமிழ்தேசக் குடியரசை அமைத்து புதிய குடியாட்சி (சனநாயகம்)த் தேர்தல் முறையில் வாக்களிப்போம்.
தமிழர், தமிழ் தேசத்தின் நிலை
தேர்தல் கட்சிகளின் நிலை:-
பார்ப்பனிய இந்திய தேசியத் உருவாக்கத்தோடு தரகு முதலாளிய தோற்றத்தோடும் இணைந்து உருவான காங்கிரசு தோற்றத்திலிருந்தே ஒன்றையொன்று சார்ந்தே இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. அன்று முதல் இன்று வரை வல்லாதிக்க (ஏகாதிபத்திய)த் தரகு முதலாளிய நிலவுடைமைக் கூட்டுடன் பார்ப்பன பார்ப்பனிய ஆட்சியை நடத்தி வருகிறது.
நமது முன்னோடி அயோத்தி தாச பண்டிதர் 1908லேயே காங்கிரசு ஒரு பார்ப்பனர்க்கட்சி என்று அம்பலப்படுத்தியுள்ளார். தந்தை பெரியார் காங்கிரசு தோன்றியதால் பார்ப்பனர் அல்லாதார்க்கு சனியன் பிடித்துவிட்டது என்றும் காங்கிரசு ஏற்பட்ட பிறகு ஒழுக்கம் கெட்டு மோசமும், வஞ்சகமும், துரோகமும் உருவாகிவிட்டதாகக் கூறுகிறார்.
வெள்ளை வல்லாதிக்க (ஏகாதிபத்திய) எதிர்ப்புப் போராட்டத்திற்கு துரோகம் செய்து விடுதலை போராளிகளை காட்டிக் கொடுத்து மொழிவழி தேசிய விடுதலைக்கு துரோகம் செய்து, சமூக விடுதலையை மறுத்து உழைக்கும் மக்களின் விடுதலையை காவுக்கொடுத்து, வல்லாதிக்க (ஏகாதிபத்திய)த்தோடு சமரசம் செய்து இந்திய தேசிய ஆட்சிக் கட்டிலில் ஏறியதுதான் இந்த காங்கிரஸ் கட்சி (இதனாலேயே விடுதலை பெறவில்லை என அறிவித்த பெரியார் 1947 ஆகஸ்ட் 15ம் நாளை துக்கநாள் என அறிவித்தார்.
பாக்கிஸ்தான் பிரிவினையின் போதும் தெலுங்கானா, பஞ்சாப் போராட்டங்களின் போதும் காங்கிரசு நடத்திய படுகொலைகள் ஏராளம். இன்றும் காஷ்மீர், ஒரிசா, சார்க்கண்டு, தண்டகாரண்யா, வடகிழக்கு தேசங்களிலும் காங்கிரசு மக்களின் உரிமைகளை மறுத்து படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றது. நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பர்மா முதலிய நாடுகளிலும் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்கு பாதுகாப்பளித்து பல்லாயிரக் கணக்கான முகமதியர் படுகொலைக்கும் காரணமானது காங்கிரசு.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு மொழி இனப்போரின் போது 500க்கும் மேற்பட்டோரை கொன்றும், தமிழின போராளிகளான திலீபன், சங்கரலிங்கனாரை உண்ணாவிரதம் இருந்தே சாகவிட்டும், கச்சைத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்துத் தமிழர் மீனவர் படுகொலைக்கு காரணமாய் இருந்து துரோகமிழைத்துள்ளது. நம் தமிழ் ஈழ சொந்தங்கள் இலட்சக்கணக்கில் ஈழத்தில் மடியவும் காங்கிரசு காரணமாய் இருந்தது. இப்படி மனித இனத்திற்கே எதிரான பல படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.
குருதிச் சேற்றில் மூழ்கிக் குளிக்கும் காங்கிரசு ஊழலிலும் மூழ்கித் திளைக்கிறது. இந்திராவின் நகர்வாலா, ராஜிவ், சோனியாவின் போபர்ஸ், நரசிம்மராவின் பங்குபத்ரா, மன்மோகன் சிங்கின் ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த், ஆதரசு குடியிருப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையூட்டு என இவர்களின் ஊழல் பட்டியல் நீள்கிறது.
பார்ப்பன இந்து தேசியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவதன் மூலம் இங்கு நிலவும் சாதி ஒடுக்குமுறைக்கும், பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், இன, தேசிய ஒடுக்கு முறைக்கும் இக்காங்கிரசு காரணமாய் உள்ளது. இதனால் ஒடுக்கப்பட்ட இனங்கள், சாதிகள், பெண்களின் எதிரியாகவே உள்ளது. மேலும் வல்லாதிக்க (ஏகாதிபத்திய)த் தரகு முதலாளிய - பார்ப்பன நிலவுடைமைகளின் நலனுக்காக செயல்படுவதன் மூலம் தொழிலாளர் - விவசாயிகள், வணிகர்கள், தேசிய முதலாளிகளின் எதிரியாகவே காங்கிரசு செயல்படுகின்றது.
குடியாட்சித் (சனநாயக) தேர்தல் என கூப்பாடு போடும் காங்கிரசுக் கட்சி உட்கட்சி தேர்தல் நடத்துவதை மறந்தே போய்விட்டது. மோதிலால் நேரு, சவகர்லால் நேரு, இந்திரா, சஞ்சய், ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா என இந்த ஆரிய பார்ப்பனக் கூட்டம் இந்நாட்டை ஆள உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றது. நீங்கள் போடத்தான் வேண்டுமா? இவர்களுக்கு வாக்கு. ஒரு நிமிடம் நெஞ்சில் நிறுத்திப் பாருங்கள் உங்கள இன உறவுகளின் படுகொலையை.
பார்ப்பன, பார்பனிய இந்திய தேசிய உருவாக்கத்தோடும் தரகு முதலாளிய உருவாக்கத்தோடும் இணைந்து உருவானதே பா.ஜ.க (R.S.S, BJP வேறு வேறானதல்ல ஒன்றே, காங்கிரசு, பா.ஜ.க இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சாத்தான்கள் தான்) அது தொடக்கத்திலிருந்தே பார்ப்பனர், தரகு முதலாளிகள், நிலவுடைமையாளர்களின் கட்சியாக இருப்பதோடு ஏகாதிபத்திய கூட்டாளியாகவே விளங்குகின்றது. காங்கிரசு கேட்ட, நடத்துகிற சுயராஜ்ஜியமும் இவர்கள் (பா.ஜ.க) கேட்கிற ராமராஜ்ஜியமும் ஒன்றே. அது பார்ப்பனர்கள், தரகு முதலாளிகள் நிலவுடைமையாளர்களின் ராஜ்ஜியம்தான். இவர்களுக்கிடையே அடிப்படையில் வேறுபாடு இல்லை. அணுகுமுறையில் மட்டும் வேறுபாடு உடையவர்கள்.
பாக்கிஸ்தான் பிரிவினை, மும்பைக்கலவரம், பாபர் மசூதி இடிப்பு, குசராத் படுகொலை, ஒரிசா, கருநாடகம், கோவை என பல படுபாதக படுகொலைகளை இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தி வருவதன் மூலம் பா.ஜ.க தன்னை இந்து மதவெறி பாசிசக் கட்சியென நடைமுறையில் நிரூபித்துக் கொள்கிறது. மேலும் அவர்களின் பாசிச விருப்பத்தை ஆர்.எஸ்.எஸ் பெண் துறவி சாத்வி ரிதம்பரா கூறுகிறார் கேளுங்கள். "இந்து ஆண்களே முகமதிய பெண்களை கர்ப்பினியாக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக்கரு ஜெனிக்கட்டும்" இது ஒன்று போதாதா நாம் இவர்களை புரிந்து கொள்ள.
பார்பானி, ஜால்னா, புரனா, அவுரங்காபாத், ஐதராபாத், அஜ்மீர், மலேகான் என முகமதியர் கூடும் இடங்களில் குண்டு வைத்து பல்லாயிரம் பேர்களை திட்டமிட்டு படுகொலை செய்ததன் மூலம் தான் ஒரு இந்துமத பயங்கரவாதி என்பதை அம்பலப்படுத்திக் கொண்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சிங்கள பேரினவாத அரசோடு பல்வேறு ஒப்பந்தங்கள் போட்டும், ஆயுதங்களை அள்ளி வழங்கியும் தமிழினப் படுகொலைக்குத் துணை நின்றது தான், இந்த பா.ஜ.க.
பார்ப்பன இந்து மதத்தை இந்து தேசியத்தை உயர்த்திப் பிடித்துப் பாதுகாப்பதன் மூலம் இங்கு நடைபெறும் இன, தேசிய, சாதிய, பெண்கள், சிறுபான்மை மதத்தவர்கள் மீதான ஒடுக்குமுறையை நேரடியாக அமைப்பு ரீதியாக நடத்துவதன் மூலமும், அதற்கு காரணமாக இருப்பதன் மூலமும் பா.ஜ.க ஒடுக்கப்பட்ட இனங்கள், தேசங்கள், மதங்கள், சாதிகள், பெண்களின் வெறுக்கத்தக்க எதிரியாகவே உள்ளது.
பார்ப்பனர், ஏகாதிபத்திய, தரகு முதலாளிய, நிலவுடைமையாளர்கள் ஆகியோரின் நலனுக்காக செயல்படுவதன் மூலமும், பன்னாட்டு நிறுவனங்களின் தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகளை தான் ஆண்ட காலத்திலும், இன்று தான் ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் தொழிலாளர்களின், விவசாயிகளின், வணிகர்களின் தேசிய முதலாளிகளின் எதிரியாகவே செயல்படுகிறது பா.ஜ.க. இந்த இந்து மத வெறியர்களுக்காக உங்கள் வாக்கு?
அண்ணா - கருணாநிதி வழியில் வந்த, தி.மு.க.வின் வீழ்ச்சி நிலையையே தன் தொடக்க நிலையாகக் கொண்டும், தொடங்கும்போதே இந்திய தேசியத்தை ஏற்றும், இந்திய தரகு முதலாளிகளின் நலன்களை ஏற்றும், பார்ப்பனியத்தை ஏற்றும், வேற்று இன தலைமையில் (மலையாளி எம்.ஜி.ராமச்சந்திரன்) உருவானது தான் அ.இ.அ.தி.மு.க.
அதன் பிறகு தலைமை ஏற்ற பார்ப்பன ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற 10 ஆண்டு கால ஆட்சியே நாம் பார்க்க வேண்டியுள்ளது.
சட்டமன்றத்தில் தன்னை பாப்பாத்தி என்று அறிவித்துக் கொண்டது, மகாமகம் நடத்தி 42 பேரைக் கொன்றது, கோயில் மடங்களில் அன்னதானம், ஆடு, கோழி வெட்டு தடைச் சட்டம், மதமாற்ற தடைச் சட்டம், பாபர் மசூதி இடிக்கவும், ராமர் கோயில் கட்டவும் கல் எடுத்துக் கொடுத்தது. மதவெறியன் நரேந்திர மோடிக்கு விருந்து சமைக்கவும், புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டது போன்ற தமிழர் விரோத பார்ப்பனச் சாதனைகள்.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் 500க்கு மேற்பட்ட பழங்குடிகள் கொலை 100க்கு மேற்பட்ட பாலியல் பலாத்காரம், காவல்துறை, ரவுடிகள் கூட்டுக் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தமிழகம் முழுவதும் பயங்கரவாத பகுதியாக அறிவித்து பேயாட்சி நடத்தியது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ, அவரது கட்சியினர், நெடுமாறன், சுபவீரபாண்டியன், பாவாணன், தாயப்பன், கொளத்தூர் மணி, நக்கீரன் ஆசிரியர் கோபால் என பயங்கரவாத பீதியூட்டி கைது சித்ரவதை என்பதோடு நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது, வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டது என எங்கும் பொடா, தடா என பயங்கரவாத ஆட்சி நடத்தியவர் தான் ஜெயலலிதா.
2 லட்சம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம், பல ஆயிரம் பேர் கைது, 40 பேர் மரணம், சாலை பணியாளர் வேலை நீக்கம், கைது. வேலைக்குத் தடை சட்டம், விவசாயிக்கு எலி கறி, நெசவாளிக்கு கஞ்சி தொட்டி, தொழிலாளர்களுக்குக் கதவடைப்பு வழங்கிய ஜெயா பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை அமுல்படுத்தி ஃபோர்டு , ஹுண்டாய், கோக்ககோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும் செய்து கொடுத்து வரிவிலக்களித்து ஏகாதிபத்திய சேவை செய்து தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமியர்கள், தமிழ் இன உணர்வாளர் மீது ஒடுக்குமுறை என எங்கும் காட்டாட்சி நடத்தியவர்தான் இந்த ஜெயலலிதா.
விடுதலை புலிகளுக்குத் தடை விதித்தது, ஈழ ஆதரவு கட்சிகளுக்கு, ஈழ ஆதரவு செயல்பாட்டிற்குத் தடை விதித்தது, ராஜூ வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்குக் கருணை காட்டக்கூடாது எனக் கூவியது. புலித் தலைவரை கைது செய்ய தீர்மானம், ஈழத்திற்கு ஆதரவாக பேசத்தடை, தமிழ்ச் செல்வன் மரணத்திற்கு கவிதை எழுதியதிற்கு எதிர்ப்பு, பாலசிங்கம் மருத்துவ உதவி பெற தடை என ஈழ விரோத பார்ப்பனச் செயல்களை செய்ததோடு போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் என கொக்கரித்தது. ஈழ அழிப்பு போரில் இந்தியாவிற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு என அறிவித்தவர்தான் இந்த ஜெயலலிதா.
வளர்ப்பு மகனுக்கு 100 கோடியில் திருமணம், பல நூறு ஜோடி செருப்பு, நகை, புடவை என பகட்டு மகாராணியாக உலா வந்த இவரே டான்சி நிலபேர ஊழல் என 40க்கு மேற்பட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் இந்த ஊழல் ராணி. பேயாட்சி நடத்திய தமிழர் விரோத ஜெயாவுக்கா உங்கள் வாக்கு?
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.விற்கு மாற்று என கூறி கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் இன்று அ.தி.மு.க வோடு கூட்டணியும், குடியுமாக உள்ளார். இந்திய தேசிய கருத்தோட்டம், தரகுமுதலாளிய வர்க்கத்தன்மை வேற்றின (தெலுங்கு) இனத்தலைமை கொண்ட தமிழர் விரோத கட்சியே தே.மு.தி.க. இது அ.தி.மு.க.வின் நகல் பிரதியே. இவர்களுக்கிடையே உள்ள ஒரே ஒரு வேறுபாடு அது பார்ப்பன தலைமை, இது தெலுங்கு தலைமை.
இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்ட சமரச, சந்தர்ப்பவாத திருத்தல்வாத கட்சியே இ.க.க.
ஊரெல்லாம் தாராளமயம், தனியார் மயம், உலகமயத்திற்கு எதிராக போராடும் சி.பி.எம். ஆளும் மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் அதை அமுல் படத்துகிற ஏகாதிபத்திய தரகு முதலாளிய சேவையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பது மேற்குவங்கத்தில் தன்னை இந்து என்று அறிவித்துக் கொள்வது, திருப்பூரில் தன் ச.ம.உ மூலம் கோடிகளை குவிப்பது, நிறுவனங்களை நடத்துவது, பார்ப்பனர்களை மட்டும் தலைமைக்கு அனுமதிப்பது, மகரஜோதி ரகசியத்தை சொல்ல முடியாது என மூடநம்பிக்கை வளர்ப்பது, மேற்கு வங்கத்தில் 17 ஆயிரம் தலித்களை கொன்றது. நந்திகிராம், சிங்கூரில் விவசாயிகளை வேட்டையாடியது, தொழிலாளர்களின் போராட்டத்தை காட்டி கொடுத்து நிர்வாகத்திடம் காசு வாங்குவது, இந்திய தேசிய நிலையில் பார்ப்பன பி.ஜே.பி. யின் மறுபதிப்பாக இருப்பது, தமிழருக்கு விரோதமாக செயல்படும் சி.பி.எம் ஒரு பார்ப்பன தரகு முதலாளிய ஏகாதிபத்திய ஆதரவு திருத்தல்வாத கட்சியே. இதன் தமிழ்நாட்டு கிளை வேற்றின தலைமையில் உள்ளது.
இந்திய அளவில் செயல்படும் கட்சிகளின் கொள்கையை? காங்கிரஸ் வடிவமைத்தது என்றால் தமிழ்நாட்டில் செயல்படும் கட்சிகளின் கொள்கையை (சமரசம், சரணாகதி, சந்தர்ப்பவாதம்) வடிவமைத்தவர் அண்ணாதுரை. தி.மு.க நாட்டு விடுதலைக்காக அமைக்கப்பட்ட கட்சியைத் தவிர அது சட்டசபையை கைப்பற்றி மந்திரி சபையை அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வெறும் அரசியல் கட்சியல்ல (அண்ணா நம்நாடு 02.01.1962) என்று கூறிய தி.மு.க. 1952 தேர்தலில் பங்கேற்கவில்லை, 57ல் நடந்த தேர்தலில் 15 இடங்களையும் 62ல் 50 இடங்களையும் 67ல் குலக்கல்வி ராஜகோபாலாச்சாரியோடு கூடி ஆட்சியைக் கைப்பற்றியது.
திராவிட நாடு கோரிக்கை வைத்திருந்தால் தேர்தலில் நிற்க முடியாது என்பதற்காகவே திராவிட நாட்டுக் கோரிக்கையை கைவிட்ட தி.மு.க. பின்னர் மாநில சுயாட்சி என நழுவி பின்னர் உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கை கொடுப்போம் என பதவி சுகத்திற்காக விழுந்த தி.மு.க. தன் கடவுள் மறுப்பு கொள்கையை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பார்ப்பனர்களுக்கும் சாமரம் வீசியது. அதே போல் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளி ஓட்டுக்காக தமிழ் அடையாளத்தை மறுத்து திராவிடம் பேசி வருகிறது.
1967ல் ஆட்சியில் இருந்து காங்கிரஸ்சை அகற்றிய தி.மு.க. நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என இறங்கி இன்று சோனியா, ராகுல் கண்ணசைவிற்கு கைகட்டி சேவகம் செய்கிறது தி.மு.க.
மதவாத எதிர்ப்பு, சமூகநீதி வேடம் போட்ட தி..மு.க. பா.ஜ.கவோடு கூட்டணி போட்டதோடு, பா.ஜ.க சரியான கட்சி என்றும், RSS சமுதாய இயக்கம் என்று அறிவித்தது. அதே போல் நம்பிக்கை துரோகி, சாதி கட்சி என பா.ம.க. வி.சி.க களை குறிப்பிட்ட கருணாநிதி இன்று அவர்களோடு கூட்டணி தந்து சமூகநீதி பேசுகிறார்.
வீராணம், கூவம் ஊழல் தொடங்கி இன்று 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ஊழல் மூலம் தன் குடும்ப வருவாயைப் பெருக்கி வருகிறது கருணாநிதி குடும்பம்.
தமிழக விளைநிலங்களை முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து 300 கோடியில் தொழில் தொடங்கிய நோக்கியாவிற்கு 650 கோடி வரி சலுகை கொடுத்தது, கலைஞர் காப்பிட்டுத் திட்டம் என்ற பேரில் முதலாளிகள் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க, உலகமய, தாராளமய கொள்கைகளை அமுல்படுத்தித் தமிழ்நாட்டைத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்றுக் கொண்டிருக்கிறது தி.மு.க.
கல்வியைக் கடைசரக்காக்கி விற்கும் தி.மு.க. மதுவை அரசே ஏற்று நடத்தி 2003 - 04ல் 3639 கோடி வருவாயில்? இருந்து 2010ல் 12,491 கோடிகளை வருவாயாக? ஈட்டுகிறது.
தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள், வேலை செய்ய வெளி தேசத்தார் இங்கோ 62 லட்சம் படித்த வேலையற்ற இளைஞர்கள், 2500 வி.ஏ.ஓ பணிக்கு 9 லட்சம் விண்ணப்பங்கள்.
மனைவி, மக்கள், பேரன்களின் ஆட்சிப் பதவிக்காக டெல்லியில் மண்டியிட்டு காரியம் சாதித்த கருணாநிதி
தமிழை ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக போராடியோ, டெல்லியில் மண்டியிட்டோ காரியம் சாதித்தது உண்டா?
காவேரி, பாலாறு, முல்லை பெரியாறு, ஒகேனக்கல் தண்ணீருக்காக போராடியது உண்டா?
தமிழ்நாடு இழந்த எல்லைகளை மீட்க கச்சத் தீவை மீட்க போராடியதுண்டா?
தமிழக மீனவர் படுகொலைகளை தடுத்து நிறுத்தியது உண்டா?
85ல் தமிழருக்கு உதவ தனக்கு ஒரு அரசு இல்லையே என உருகிய கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தடுத்து நிறுத்த போராடியது உண்டா? மண்டியிட்டாவது காரியம் சாதித்தாரா?
இவையெல்லாவற்றிற்கும் இல்லை என்பதே பதில். தி.மு.க தமிழர்களுக்கோ தமிழ்நாட்டிற்கோ செய்தது துரோகம் மட்டுமே!
தி.மு.க ஆட்சியும், அண்ணா நட்டுவைத்த திராவிட தேசியமும் வளர்ந்து விரிந்து தழைத்து மரமாகவில்லை. அது வளர்ப்புள்ள மரமும் அன்று. அது ஏணி மரம் போன்றது, அதை நட்டுவைத்தவர்களை தேர்தல் படிகள் மூலம் பதவிப்பரனுக்கு ஏற்றிவிட்டது.
அதன் தரகு முதலாலிய வர்க்க தன்மை, ஏகாதிபத்திய, நிலவுடைமை, எதிர்ப்பு இன்மை திராவிட தேசியம் இவையே தி.மு.க. வீழ்ச்சிக்கு காரணம். இந்த துரோகிகளுக்கா உங்கள் ஓட்டு?
கொள்கை நிலையில் 80களில் தி.மு.க.வின் நகலாகவே ம.தி.மு.க உள்ளது. வேற்றினத் தலைமை, சமரசம், சந்தர்ப்பவாதம், சரணாகதியே இதன் அரசியலாக உள்ளது.
பா.ம.க., வி.சி.க, புதிய தமிழகம்
சாதி ஒழிப்பு, சமூகநீதி, மொழி, இன, உரிமை தன்னுரிமை, தமிழ் ஈழ ஆதரவு, மது ஒழிப்புக் கொள்கைகளை முன் நிறுத்தி உருவாக்கப்பட்டது பா.ம.க, வி.சி.க, புதிய தமிழகம். இவற்றின் தோற்றத்திலும் சாதி குறித்த அணுகுமுறையிலும் இவர்களிடையே வேறுபாடு உண்டு எனினும் அதன் வர்க்க சமூக உள்ளடக்கம் ஒன்றாகவே உள்ளது. இவர்கள் தங்களை ஆளும் வர்க்கமாக மாற்றிக் கொள்வதற்காகவே செயல்பட்டு வருகின்றது. அதாவது தன்னை கருணாநிதியாக மாற்றிக் கொள்ளவே விரும்புகின்றனர்.
இவர்களின் கொள்கைகள் கரைந்து காற்றில் பறந்துவிட்டன. இவர்களின் ஒரே நோக்கம் நிலவும் சமூக தேசிய நிலையிலே தங்களை ஆளும் வர்க்கமாக மாற்றிக் கொள்வதே. இவர்களிடம் மிச்சம் மட்டுமே மிச்சம் இருக்கிறது. தங்கள் மொத்த கொள்கையையும் சந்தர்ப்பவாதத்திற்கும் சரணாகதிக்கும் கொடுத்து தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டனர். இவர்களின் இஸ்லாமிய புதிய நகலாகவே ம.நே.ம.க. உள்ளது. இவர்கள் அனைவரும் கருணாநிதியின் அரசியல் வாரிசுகளே.
கூட்டணியின் கொள்கை
தமிழ்நாட்டில் இவர்கள் அமைக்கும் கூட்டணி இரண்டாக இருந்தாலும் கொள்கை ஒன்றுதான் அவர்களின் வர்க்க சமூக உள்ளடக்கத்தில் சில வேறுபாடுகள் இருந்தாலும் இவர்களின் ஒரே நோக்கம், நிலவும் இந்திய தேசிய நிலையிலும், பார்ப்பன சமூக நிலையிலும் மாற்றம் ஏற்படாமல் பாதுகாப்பது அல்லது அதற்கு உடந்தையாக செயல்பட்டு இந்தியத் தேசியத்திற்கும், தரகு முதலாளிய நிலவுடைமை வர்க்கத்திற்கும், வல்லாதிக்கத்திற்கும் (ஏகாதிபத்தியத்திற்கும்), பார்ப்பனியத்திற்கும் சேவை செய்வதே.
இவர்களின் கூட்டணி ஊழல் செய்வதிலும், மக்களுக்கு எதிராக பன்னாட்டு நிறுவனங்களின் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை அமுல்படுத்தி தமிழ் தேசத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதிலும் ஒன்றாகவே செயல்படுகின்றது.
காவேரி, முல்லைப் பெரியார், பாலாறு, ஒக்கேனக்கல் முதலிய தமிழ்தேசத்தின் ஆற்றுநீர்ச் சிக்கலை தீர்க்கவோ, இழக்கப்பட்ட பகுதிகளையும் தீவுகளையும் மீட்கவோ, மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தவோ, தமிழர்கள் கடலுரிமையை பாதுகாக்கவோ, அனைத்து தளங்களிலும் தமிழை ஆட்சி மொழியாக்கவோ வக்கற்றதுதான் இவர்களின் கூட்டணி. பன்னாட்டு நிறுவனங்களையும், வெளிநாட்டு தொழிலாளர்களையும் இறக்குமதி செய்துவிட்டு தமிழர்களை கூலிகளாக வெளிநாடுகளுக்குத் துரத்தும் அவர்களின் கூட்டணி சமூக பொருளியல் தளத்தில் தமிழர்களை ஒடுக்கியதைப் போலவே அவர்களின் அரசியல் தளத்திலும் தமிழர் தலைமையை மறுத்து வேற்றினத் தலைமையை பாதுகாக்கிறது. தமிழ்தேச மக்களின் தேசிய, அரசியல் பொருளியல் சமூக சிக்கல்களைத் தீர்க்க மறுக்கும் இக்கூட்டணிகள் நம்மை ஏய்க்க நம் பணத்திலேயே நமக்கு இலவசங்களை அள்ளித் தருகின்றன.
இந்திய அரசின் உதவியோடு சிங்கள பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழீழப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ, அதற்கு எதிராக இந்திய அரசை எதிர்த்துப் போராடவோ முன்வராத இக்கூட்டணி தங்கள் அரசியல் லாபங்களையும் பதவிகளையும் தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து தமிழர்களுக்குத் துரோகமிழைத்தது. இவர்களை புரிந்து கொள்ள பெரியார் கூறியதை நினைவுபடுத்தி கொள்வது உதவியாக இருக்கும்.
நாட்டில் ஒரு ஒரு கட்சியைத் தவிர வேறுகட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்க பல பெயர்களில் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கி தின்று வயிறுவளர்க்க வேண்டும் பதவி வேட்டையாடிப் பெருவாழ்வு வாழ வேண்டும் இவை இரண்டும் தான் கொள்கையும் நோக்கமாக இருந்து வருகின்றன. அரசியல் சட்டத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இதுமாத்திரம் இல்லாமல் நடப்புத் திட்டத்தை குறை கூற கூட நம்நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச்சதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது. (பெரியார், விடுதலை 1957)
இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே வேறுபாடு உண்டா என்றால் வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடு டெல்லியை நோக்கிச் செல்லும் தொடர் வண்டியின் இழுவை எந்திரத்திற்கும், அதன் பெட்டிகளுக்கும் உள்ள வேறுபாடாகும். முதல் பெட்டிக்கும், இரண்டாம் பெட்டிக்கும் அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் உள்ள வேறுபாடே இவர்களுக்கு இடையிலான வேறுபாடாகும்.
தொடர் வண்டியின் இழுவை இயந்திரங்களாக காங்கிரசு, தி.மு.க, அ.தி.மு.க செயல்படுகின்றது. மற்ற கட்சிகள் அதன் பெட்டிகளே. இதற்கு மற்ற கட்சிகள் இழுவை எந்திரமாக செயல்படாது என்று பொருளல்ல. அவற்றால் இயலாது என்பதே பொருளாகும். ஆக நமக்குத் தேவை மூன்றாவது அணி அல்ல. இந்திய தேசியத்தை மறுத்து, ஏகாதிபத்திய, தரகு முதலாளி, நிலவுடைமை எதிர்ப்புக்கொண்ட, சோசலிசத்தை நோக்கி முன்னேறக் கூடிய ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம், அனைத்துப் பகுதிகளின் பிரதிநிதித்துவமுடைய பார்ப்பன அதிகார வர்க்கத்தைத் தடை செய்த, வேற்றினத் தலைமையை மறுத்த, 50% பெண்களைக் கொண்ட, உழைக்கும் தமிழர் தலைமை தாங்க, தேசிய முதலாளித்துவத்தை கட்டுப்படுத்தகூடிய விவசாயிகள் தொழிலாளர்களின் தமிழ்தேச குடியரசுக்காக போராட கூடிய மாற்று அணியே!.
காங்கிரஸ் எதிர்ப்பு:
தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ் ஈழ இனப் படுகொலையை நிகழ்த்திய காங்கிரசை தோற்கடிப்பது என்ற கருத்தோட்டமும் நம்மிடையே நிலவி வருகிறது. தமிழ் இன விரோத காங்கிரசை தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் பழி தீர்ப்பது, மற்றவர்களுக்கும் இதை ஒரு எச்சரிக்கையாக மாற்றுவது என்பதே இக்கண்ணோட்டத்தின் விளக்கமா உள்ளது.
ரத்தகறை படிந்த காங்கிரசை தேர்தலில் தோற்கடிப்பது, காங்கிரஸை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்பது என்ற இரண்டு வாய்ப்புகள் நம் முன்னே உள்ளன. தேர்தலில் தோற்கடிப்பது, ஒழிப்பது இரண்டும் ஒன்றுபோல் தென்பட்டாலும் ஒன்றல்ல. காங்கிரசை தேர்தலில் தோற்கடிப்பது என்பது கருவை மரத்தின் கிளைகளை கழிப்பதுதான். ஒழிப்பது என்பது கருவை மரத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடிங்கி எரிவதுதான்.
தேர்தலில் தோற்கடிப்பது அதை ஒழிக்கதான் என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். காங்கிரசை ஒழிப்பது என்றால் அதன் வேராக இருக்கிற பார்ப்பன - பார்ப்பனியத்தை ஒழிப்பது, இந்திய தேசியத்தை ஒழிப்பது, தரகு முதலாளித்துவத்தை ஒழிப்பது, நிலவுடைமையை ஒழிப்பது என்பதே பொருளாகும். இவைகள் காங்கிரசின் வேர்களாக மட்டுமல்ல இங்குள்ள அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளின் வேர்களாக உள்ளன. பா.ஜ.க.வின் வேர்கள் இவையே. காங்கிரசின் திராவிட குட்டிகள் அ.தி.மு.க, தே.மு.தி.க.வின் வேர்களும் இவையே. சில பண்புகள் நீங்கலாக தி.மு.க.வின் வேர்களும் இவையே. இவர்களின் கூட்டாளிகளின் தன்மையும் அதை நோக்கியே உள்ளது.
ஆக காங்கிரசை ஒழிப்பது என்று தீர்மானித்தால் அந்த பண்புகள் கொண்ட அனைத்தையும் ஒழிக்கும் கடமையை நாம் ஏற்க வேண்டும். அக்கடமையை ஏற்கிறோம் என்றால் அனைத்துக் கட்சிகளையும் தோற்கடிக்க நமக்கான மாற்றை உருவாக்கிக்கொள்ள தேர்தலை மறுத்து அமைப்பாய் மாறி போராடுவதே வழி.
இவை இரண்டுக்குமான நடைமுறைகளை கடந்த கால நம்முடைய வரலாறு காட்டுகிறது. காங்கிரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என செயல்பட்ட பெரியார் பார்ப்பன - பார்ப்பனிய ஒழிப்பை இந்திய தேசிய ஒழிப்பை முன் வைத்து செயல்பட்டார் ஏனென்றால் காங்கிரசின் உயிர் தேர்தல் களத்தில் இல்லை இங்கு தான் உள்ளது என்பதால்தான்.
இன்னொரு படிப்பினையும் நம் வரலாறு நமக்கு வழங்கியுள்ளது. அது 1967ல் தேர்தல் களத்தில் காங்கிரசை வீழ்த்திய தி.மு.க. 1967ல் வீழ்த்தியவர்கள் இன்று காங்கிரசின் காலில் விழிந்துகிடக்கிறார்கள் ஏன்? அவர்கள் அடிப்படையை ஒழிக்க விரும்பவில்லை. அதனடிப்படையையே தன் அடிப்படையாக ஏற்றுக் கொண்டார்கள்.
1967ல் கிளைவெட்டப்பட்ட கருவை மரம் மீண்டும் கிளைத்து தழைக்கிறது என்றால், கிளை வெட்டும் வேலையைவிட்டு நாம் வேர் அறுக்க தொடங்குவதுதான் சரியானதாக இருக்கும். இப்பொழுது நாம் தீர்மானிப்போம் நம் வழி பெரியார் வழியா? தி.மு.க வழியா?
தோழர்களே! இவர்களால் நாம் இழந்தது கொஞ்சம் நஞ்சமல்ல. பல லட்சம் இன உறவுகளை, தேசங்களை இழந்திருக்கிறோம். இதன் பிறகும் இவர்களை தேர்தலில்தான் சந்திக்க வேண்டுமா? வீதியில் சந்திக்க மாட்டோமா? அமைப்பாக மாறி இவர்களை நம் வீதிகளில் எதிர்கொண்டு மோதுவோம். தமிழ் இன தேச விடுதலையை சாதிக்க.
49 O - ஒதுங்கிபோ
அரசியல் கட்சிகள் ஆட்சிமீதான நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தியை வடிய செய்வதற்கு கொண்டுவரப்பட்டு பார்ப்பன சேஷன், ஞானியால் புகழப்பட்டு முன் நிறுத்தப்பட்டு இன்று நம்மிடையே உள்ள கருத்தோட்டமாக உள்ள 49 O ஐ பரிசீலிப்போம்.
49 O என்பது இறையாண்மையற்ற சட்டமன்றத்திற்கு நடக்கும் குடியாட்சி தன்மையற்ற தேர்தலையும், போலி குடியாட்சி தேர்தல் முறையையும் ஏற்றுக் கொண்டே தேர்தலில் உள்ள வேட்பாளர்களை புறக்கணிக்கிறோம், என்பதே இதன் பொருள்.
49 O ஐ பயன்படுத்தி இத்தேர்தல் இறையாண்மையற்ற, குடியாட்சி தன்மையற்ற தேர்தல் என்பதை அம்பலப்படுத்த வாய்ப்பற்றது. ஞானி வழியில் அதிருப்திகளில் பதிவு செய்யலாமே ஒழிய வேறெந்த பொருளும் முக்கியத்துவம் அற்றது.
உண்மையில் 49 O பாராளுமன்றம், சட்டமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை பெறுவதன் மூலமாக நிலவும் தேச, சமூக நிலைமைகளில் மாற்றத்தை சாதிக்க முடியும் என்ற பாராளுமன்ற வாதத்தின் ஒரு பகுதியே. பாராளுமன்ற கட்சிகள் என்ன சொல்கின்றன? நாங்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ளோம் ஆதலால் ஆளும் வர்க்கம் அமைதியாக தன் வர்க்க சமூக ஆதிக்கத்தை அதை நிலைநாட்டும் அரசு அதிகாரத்தை ஒரு மாலை நேர விருந்தில் விடைபெறுவது போல விட்டுவிட வேண்டும் என்கிறது.
அதே தன்மையிலேயே 49 O நாங்கள் இவ்வளவு எண்ணிக்கையில் அதிருப்தியாளராக இருக்கிறோம் ஆகையால் ஆளும் வர்க்கம் அமைதியாக விடை பெற வேண்டும். அல்லது நாங்கள் எதையும் செய்யாமலே நல்ல அரசியல் கட்சிகளை, அரசை எங்கள் முன் கொண்டு வர வேண்டும் என்கிறது.
ஆக பாராளுமன்ற வாதத்தின் பகுதியாகவும், வர்க்க சமூக போராட்டத்தை மறுப்பதின் வெளிப்பாடே ஒதுங்கி போகும் இந்த 49 O, வர்க்க சமூக போராட்டத்தில் நாம் ஒதுங்கி போக முடியுமா? மரம் அமைதியை நாடினாலும் காற்று விடுமா?
வாக்களிக்க மறுக்கலாமா
வாக்களித்து மக்கள் தங்கள் இறையாண்மை உள்ள அரசை அதன் அனைத்து உறுப்புக்களையும் தேர்ந்தெடுப்பதையும், தங்களுடைய கட்டுப்பாட்டில், கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதையும், தேர்ந்தெடுத்த உறுப்பினர்களை திருப்பி அழைப்பதையும் நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். அதற்காகவே போராடுகிறோம். நம் தமிழ்நாடு புதுவை சட்டமன்றம் எவ்வித அதிகாரமற்று இருப்பதாலும் நடக்கும் தேர்தல் முறை குடியாட்சி தன்மை இல்லை என்பதாலுமே நாம் வாக்களிக்க மறுக்கிறோம். ஆக நாம் வாக்களிப்பதற்கு எதிராக இல்லை. தவறான, உரிமையற்ற தேர்தலில் வாக்களிக்க மறுக்கிறோம். வாக்களிக்க மறுப்பது நமது சனநாயக உரிமையே.
வாக்களிக்க மறுத்து என்ன செய்யலாம்?
வாக்களிக்க மறுப்பது செயலற்ற தன்மையல்ல. செயலற்ற தன்மைக்கு அமைப்பு பலவின்மையே காரணமாக உள்ளதே ஒழிய கொள்கைக் காரணமல்ல. வாக்களிக்க மறுத்து அமைப்பாய் மாறலாம்! வாக்களிக்க மறுத்து தேர்தல் கட்சிகள், முறையை அம்பலப்படுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம்!, இத்தேர்தல் சூத்திர பஞ்சம, பட்டத்தை ஒழிக்காது என்பதை முன் நிறுத்தி கருவறை நுழைவு போராட்டத்தை நடத்தலாம்!, இத்தேர்தல் கோயில் - மடம் - நிலவுடைமையாளர்களின் நிலத்தை பறிக்காது என்பதை முன் நிறுத்தி நிலம் மீட்பு இயக்கம் நடத்தலாம்!, இத்தேர்தல் சாதியை ஒழிக்காது என்பதை முன் நிறுத்தி சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தலாம்!, இத்தேர்தல் ஆங்கில, இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை ஒழிக்காது என்பதை முன் நிறுத்தி இந்தி, ஆங்கில எழுத்துக்களை அழிப்பது அதை பரப்பு நிறுவனங்களை இழுத்து மூடுவது போன்றவைகளை செய்யலாம்!, இத்தேர்தல் பன்னாட்டு ஆதிக்கத்தை ஒழிக்காது என்பதை முன் நிறுத்தி பன்னாட்டு நிறுவனங்களை இழுத்து மூடலாம்!, 50% பெண்களை வேட்பாளராக அறிவிக்காத கட்சிகளை அம்பலப்படுத்தி மறுக்கலாம்!, வேற்றினத் தலைமை நிலவும் கட்சிகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டு அம்பலப்படுத்தலாம். இதுபோன்று தேர்தலுக்கு வெளியே பல முனைகளில் மக்கள் போராட்டங்களை கட்டி அமைக்கும்போது அரசியல் கட்சிகள் தான் யார் பக்கம் என்பதை அம்பலப்படுத்திக் கொள்வதோடு, அரசியல் கட்சிகளை அதன் ஆடுகளத்திலிருந்து நம் ஆடுகளத்திற்கு இழுத்து வர முடியும் இப்படி பல முனைகளில் அம்பலப்படுத்திக் கொண்டு தேர்தலை மறுத்து நம் இலக்கை நோக்கி மக்களை அணி திரட்டலாம்.
நாம் என்ன செய்யலாம்
குடியாட்சித் தன்மையற்ற தேர்தல் முறையை மறுப்போம்!
தமிழ்தேசக் குடியரசில் புதிய குடியாட்சித் தேர்தல் முறையை உருவாக்குவோம்!!
தமிழ்தேசத்தில் நிலவும் வேற்று இன அரசியல், பொருளியல், சமூக ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவோம்!!
மக்களின் பகுதி சமூகச் சிக்கல்களை முன் நிறுத்தி வாக்களிக்க மறுப்போம்!
தொடர்புக்கு ;9840878819
மின்னஞ்சல் ;tamizharkudiyarasumunnani@gmail.com
தமிழ்நாடு, புதுவை அரசு?க்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ல் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்தும் போட்டியிடுகின்றன. தங்களுடைய பல வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக முன் வைத்து நம்மிடையே வாக்கு கேட்டு வருகின்றன. நாம் அளிக்கின்ற ஓட்டுதான் நாளை அரசாக மாறப்போவதாக சொல்லப்படுகின்றது.
நாம் நமக்கான இறையாண்மையுள்ள ஒட்டுமொத்த அரசு அதிகாரத்தை அரசை தேர்வு செய்வதே மக்களாட்சியாக இருக்கும். அந்த வகையில் தேர்தல் நடைபெறபோகும் தமிழ்நாடு, புதுவை சட்டமன்றத்தின் தகுதி என்ன? தன்மை என்ன? இங்கு நடைபெறும் தேர்தல் முறை குடியாட்சி (சனநாயக)த் தன்மை பெற்றதா? தமிழர் நிலை என்ன? தமிழ்தேசத்தின் நிலை என்ன? தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை என்ன? கூட்டணியின் கொள்கை என்ன? அவை நமக்கானதா? அவர்கள் முன் வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள் நம் சிக்கலைத் தீர்த்து விடுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.
தேர்தலில் நம் நிலை என்ன? ஓட்டுப் போடலாமா? காங்கிரசை மட்டும் எதிர்க்கலாமா? 49 ஓவைப் பயன்படுத்தி வேட்பாளர் புறக்கணிப்பை மேற்கொள்ளலாமா? வாக்களிக்க மறுக்கலாமா? வாக்களிக்க மறுத்துவிட்டு என்ன செய்யலாம்? என பல்வேறு வினாக்கள் நம் முன்னே உள்ளன. இவற்றைக் குறித்து ஒவ்வொன்றாக பரிசீலிப்போம்.
தமிழ்நாடு, புதுவைச் சட்டமன்றத்தின் தகுதி
தமிழ்நாடு, புதுவைச் சட்டமன்றம் எவ்வித இறையாண்மையும் (தன்னைத்தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை) அற்றது. நமது சட்டமன்றங்கள் தீர்மானங்கள் இயற்ற முடியுமே ஒழிய அதற்கு சட்டங்கள் இயற்றும் அதிகாரம் கிடையாது. தீர்மானங்கள் இந்திய அரசின் ஒப்புதல் பெற்றால்தான் சட்டமாக முடியும் என்ற நிலையில் உள்ளது. கல்வியில், வேலைவாய்ப்பில், தன்னுடைய மக்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு வழங்க உரிமை அற்றது. தன் ஊரிலுள்ள கல்முதலாளிக்கு (கடவுளுக்கு) யார் பூசை செய்யலாம் என்று சொல்வதற்குக் கூட திறனற்றது.
1956ல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வந்தும் அதை அமுல்படுத்தும் வக்கற்றது. தன் பெயரை (தமிழ்நாடு) தனக்குச் சூட்டிக் கொள்ளவே பல ஆண்டுகாலம் போராடியது தமிழ்நாட்டிலுள்ள நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வலிமையற்றது. தமிழ்நாட்டின் எல்லைகளை தீவுகளை தனக்குத் தெரியாமலேயே இழந்தது. சட்டமன்றத்தில் ஈழ தமிழர் படுகொலையை தடுக்க கோரி ஒருமனதாக நிறைவேறிய தீர்மானத்தை செயல்படுத்த அதிகாரமற்றது, சிங்கள அரசோடு கைகோர்த்து படுகொலை நிகழ்த்திய இந்திய அரசை கேள்வி கேட்க வக்கற்றது. தமிழ்நாட்டில் புதுவையில் யாரும் வரலாம். சுரண்டலாம், சூறையாடலாம், அதிகாரம் செலுத்தலாம். தடையின்றித் திரும்பிச் செல்லலாம். அதைத் தடுக்கும் ஆற்றலற்றது, கொடியற்றது, படையற்றது, தனக்கான கொள்கையற்றது இதுதான் தமிழக புதுவைச் சட்டமன்றம்.
இத்தகைய உரிமையற்ற அரசை தேர்ந்தெடுக்கத்தான் நமது நாலரை கோடி வாக்குகள் கோரப்படுகின்றது. நமது நாலரை கோடி வாக்குகளும் ஆளுநரின் ஒரு கையெழுத்திற்கு நிகர். ஆம் இந்த உரிமையற்ற சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க நாலரை கோடி வாக்குகள் தேவைப்படுகின்றது. ஆனால் அதை கலைக்கவோ ஆளுநரின் ஒரு கையெழுத்தே போதுமானது. சிந்தித்துப் பாருங்கள். யார் பலசாலி என்று. இதுவொன்றும் நடக்காத செயலல்ல. இதுவரை எண்பதிற்கும் மேற்பட்ட முறைகள் இந்தியாவிலுள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மூன்று முறைகள் சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதுதான் நமது சட்டமன்றத்தின் குடியாட்சி (சனநாயக) லட்சணம்.
தமிழ்நாடு தன் உரிமையை இழந்து கிடப்பதை மறைப்பதற்கும் அதற்கு நம்மை ஒப்ப வைப்பதற்குமே இந்த குடியாட்சி (சனநாயக) நாடகம். இதுவா குடியாட்சி? இதற்காகவா உங்கள் வாக்கு?
தேர்தல் முறையின் குடியாட்சித் தன்மையும் தகுதியும்:-
நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றம் எவ்வித அதிகாரமும் அற்றதாக இருக்கிறது. அந்த அதிகாரமற்ற சட்டமன்றத்தைக் கூட கேள்வி கேட்க கட்டுப்படுத்த திருப்பி அழைக்க மக்களுக்கு அதிகாரம் உள்ளதா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியிலும் தேர்தலுக்கு பின்பு அதன் எதிர்க் கூட்டணியிலும் செயல்பட்டால் நம்மால் கேள்வி கேட்க முடியுமா? முடியாத போது இதை எப்படி குடியாட்சி (சனநாயக)க் குடியரசு என்று கூற முடியும். இவையெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் இவர்கள் ஊழல் புரிய முடியுமா? நம்மை கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடியுமா? நமக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்கத்தான் முடியுமா? அப்படி ஒரு நிலை தான் தோன்றுமா?
கடந்த 60 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் அரசமைத்தக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் பெற்ற மொத்த வாக்குகள் ஏறக்குறைய வெறும் 35 விழுக்காட்டிற்கும் குறைவே. ஆக 65 விழுக்காடு மக்களின் விருப்பத்திற்கு எதிரான அரசுதானே அமைக்கப்பட்டது. இதற்குப் பெயர் குடியாட்சியா? 234 தொகுதிகளில் 118 தொகுதியை வென்றவன் ஆட்சியமைத்தால் இவர்கள் வெல்லாத 116 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் இல்லாது போகிறதே இது குடியாட்சியா?
நாம் அதிகாரமற்ற சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுத்தாலும், மக்களுக்கு அதன்மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றாலும், உண்மையில் இந்த சட்டமன்றத்திற்கு வெளியே தான் உண்மையான அதிகாரம் செயல்படுகின்றது. மூன்றுமுறை தமிழ்நாட்டுச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட போது இங்கு அரசு செயல்படவில்லையா? எல்லாம் செயல்பட்டது என்றால் நாம் தேர்வு செய்த சட்டமன்றம் வெறும் முகமூடி தானே.
ஆக உண்மையான அரசு இயந்திரமான நீதித்துறை, நிர்வாகத்துறை, படைத்துறை, பல்கலைக்கழகம், மின்சார வாரியம் முதலிய அரசின் உயர் அமைப்புகளையோ அல்லது ஆரம்பநிலை அதிகாரங்களாக செயல்படக் கூடிய கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை உதவி ஆய்வாளர், கடைநிலை நீதிபதி முதலிய இவர்கள் யாராவது நமக்கு கட்டுப்பட்டவர்களா? இவர்களை நாம் கேள்வி கேட்க முடியுமா? இவர்கள்தான் நமக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களா? இவர்களை நாம் தேர்ந்தெடுக்கத்தான் முடியுமா?
இவர்களை கேள்வி கேட்கவோ, கட்டுப்படுத்தவோ, தேர்ந்தெடுக்கவோ நமக்கு உரிமை இல்லாதபோது இவை மக்களாட்சியா? அல்லது அதிகார வர்க்கத்தின் ஆட்சியா? இவர்கள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் இவர்களால் கையூட்டுப் (லஞ்சம்) பெற முடியுமா? ஊழலில் திளைக்க முடியுமா? கரவுக் கொலைகள் (என்கவுண்டர்) நிகழ்த்த முடியுமா? தங்கள் விருப்பங்களுக்கேற்ப தீர்ப்பளிக்க முடியுமா? பார்ப்பனர்கள் அதிகார வர்க்கத்தின் ஆட்சி செலுத்த முடியுமா? இப்படியான நிலை தான் தோன்ற முடியுமா?
ஆக இத்தேர்தல் முறை பலவகையிலும் சனநாயகமற்று இருப்பதால் இதை போலி குடியாட்சி (சனநாயகம்) தேர்தல் முறை என்றே அழைப்போம். இந்த போலியான குடியாட்சித் தேர்தல் முறைக்கு வாக்களிக்க மறுத்து உண்மையான தமிழ்தேசக் குடியரசை அமைத்து புதிய குடியாட்சி (சனநாயகம்)த் தேர்தல் முறையில் வாக்களிப்போம்.
தமிழர், தமிழ் தேசத்தின் நிலை
பார்ப்பனிய இந்திய தேசியத்திடம் தன் இறையாண்மையை இழந்து நிற்கும் தமிழ்த்தேசம் . இந்திய பன்னாட்டு நிறுவனங்கள்,தரகு முதலாளிய , நிலவுடைமை ஆதிக்கம் மற்றும் சுரண்டலின் வேட்டைக்காடாக காட்சியளிக்கிறது. வணிகம், தொழில், இயற்கை வளம், நிலம், விவசாயம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் இவர்களின்சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை நிலவுகிறது. அதேபோல் தமிழர்கள் தங்கள் சமூக இறையாண்மையை பார்ப்பனர்களிடம்,இழந்ததாலும், அரசியலில் தெலுங்கர், பார்ப்பனர்கள் தங்கள் அளவுக்கு அதிகமாக அனுபவித்து வருவதாலும் , பொருளியலில் இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மார்வாடிகள் ஆதிக்கமும் மலையாளி தெலுங்கு பார்ப்பன மேலாண்மையும் நிலவுகிறது. தமிழர்கள் தங்களின் சமூக,அரசியல், பொருளியல் நிலைகளில் தங்களது உரிமையை இழந்து நிற்கின்றனர்.
தேர்தல் கட்சிகளின் நிலை:-
காங்கிரசு:
பார்ப்பனிய இந்திய தேசியத் உருவாக்கத்தோடு தரகு முதலாளிய தோற்றத்தோடும் இணைந்து உருவான காங்கிரசு தோற்றத்திலிருந்தே ஒன்றையொன்று சார்ந்தே இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. அன்று முதல் இன்று வரை வல்லாதிக்க (ஏகாதிபத்திய)த் தரகு முதலாளிய நிலவுடைமைக் கூட்டுடன் பார்ப்பன பார்ப்பனிய ஆட்சியை நடத்தி வருகிறது.
நமது முன்னோடி அயோத்தி தாச பண்டிதர் 1908லேயே காங்கிரசு ஒரு பார்ப்பனர்க்கட்சி என்று அம்பலப்படுத்தியுள்ளார். தந்தை பெரியார் காங்கிரசு தோன்றியதால் பார்ப்பனர் அல்லாதார்க்கு சனியன் பிடித்துவிட்டது என்றும் காங்கிரசு ஏற்பட்ட பிறகு ஒழுக்கம் கெட்டு மோசமும், வஞ்சகமும், துரோகமும் உருவாகிவிட்டதாகக் கூறுகிறார்.
வெள்ளை வல்லாதிக்க (ஏகாதிபத்திய) எதிர்ப்புப் போராட்டத்திற்கு துரோகம் செய்து விடுதலை போராளிகளை காட்டிக் கொடுத்து மொழிவழி தேசிய விடுதலைக்கு துரோகம் செய்து, சமூக விடுதலையை மறுத்து உழைக்கும் மக்களின் விடுதலையை காவுக்கொடுத்து, வல்லாதிக்க (ஏகாதிபத்திய)த்தோடு சமரசம் செய்து இந்திய தேசிய ஆட்சிக் கட்டிலில் ஏறியதுதான் இந்த காங்கிரஸ் கட்சி (இதனாலேயே விடுதலை பெறவில்லை என அறிவித்த பெரியார் 1947 ஆகஸ்ட் 15ம் நாளை துக்கநாள் என அறிவித்தார்.
பாக்கிஸ்தான் பிரிவினையின் போதும் தெலுங்கானா, பஞ்சாப் போராட்டங்களின் போதும் காங்கிரசு நடத்திய படுகொலைகள் ஏராளம். இன்றும் காஷ்மீர், ஒரிசா, சார்க்கண்டு, தண்டகாரண்யா, வடகிழக்கு தேசங்களிலும் காங்கிரசு மக்களின் உரிமைகளை மறுத்து படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றது. நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பர்மா முதலிய நாடுகளிலும் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்கு பாதுகாப்பளித்து பல்லாயிரக் கணக்கான முகமதியர் படுகொலைக்கும் காரணமானது காங்கிரசு.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு மொழி இனப்போரின் போது 500க்கும் மேற்பட்டோரை கொன்றும், தமிழின போராளிகளான திலீபன், சங்கரலிங்கனாரை உண்ணாவிரதம் இருந்தே சாகவிட்டும், கச்சைத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்துத் தமிழர் மீனவர் படுகொலைக்கு காரணமாய் இருந்து துரோகமிழைத்துள்ளது. நம் தமிழ் ஈழ சொந்தங்கள் இலட்சக்கணக்கில் ஈழத்தில் மடியவும் காங்கிரசு காரணமாய் இருந்தது. இப்படி மனித இனத்திற்கே எதிரான பல படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.
குருதிச் சேற்றில் மூழ்கிக் குளிக்கும் காங்கிரசு ஊழலிலும் மூழ்கித் திளைக்கிறது. இந்திராவின் நகர்வாலா, ராஜிவ், சோனியாவின் போபர்ஸ், நரசிம்மராவின் பங்குபத்ரா, மன்மோகன் சிங்கின் ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த், ஆதரசு குடியிருப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையூட்டு என இவர்களின் ஊழல் பட்டியல் நீள்கிறது.
பார்ப்பன இந்து தேசியத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவதன் மூலம் இங்கு நிலவும் சாதி ஒடுக்குமுறைக்கும், பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், இன, தேசிய ஒடுக்கு முறைக்கும் இக்காங்கிரசு காரணமாய் உள்ளது. இதனால் ஒடுக்கப்பட்ட இனங்கள், சாதிகள், பெண்களின் எதிரியாகவே உள்ளது. மேலும் வல்லாதிக்க (ஏகாதிபத்திய)த் தரகு முதலாளிய - பார்ப்பன நிலவுடைமைகளின் நலனுக்காக செயல்படுவதன் மூலம் தொழிலாளர் - விவசாயிகள், வணிகர்கள், தேசிய முதலாளிகளின் எதிரியாகவே காங்கிரசு செயல்படுகின்றது.
குடியாட்சித் (சனநாயக) தேர்தல் என கூப்பாடு போடும் காங்கிரசுக் கட்சி உட்கட்சி தேர்தல் நடத்துவதை மறந்தே போய்விட்டது. மோதிலால் நேரு, சவகர்லால் நேரு, இந்திரா, சஞ்சய், ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா என இந்த ஆரிய பார்ப்பனக் கூட்டம் இந்நாட்டை ஆள உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றது. நீங்கள் போடத்தான் வேண்டுமா? இவர்களுக்கு வாக்கு. ஒரு நிமிடம் நெஞ்சில் நிறுத்திப் பாருங்கள் உங்கள இன உறவுகளின் படுகொலையை.
பாரதீய ஜனதா கட்சி
பார்ப்பன, பார்பனிய இந்திய தேசிய உருவாக்கத்தோடும் தரகு முதலாளிய உருவாக்கத்தோடும் இணைந்து உருவானதே பா.ஜ.க (R.S.S, BJP வேறு வேறானதல்ல ஒன்றே, காங்கிரசு, பா.ஜ.க இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சாத்தான்கள் தான்) அது தொடக்கத்திலிருந்தே பார்ப்பனர், தரகு முதலாளிகள், நிலவுடைமையாளர்களின் கட்சியாக இருப்பதோடு ஏகாதிபத்திய கூட்டாளியாகவே விளங்குகின்றது. காங்கிரசு கேட்ட, நடத்துகிற சுயராஜ்ஜியமும் இவர்கள் (பா.ஜ.க) கேட்கிற ராமராஜ்ஜியமும் ஒன்றே. அது பார்ப்பனர்கள், தரகு முதலாளிகள் நிலவுடைமையாளர்களின் ராஜ்ஜியம்தான். இவர்களுக்கிடையே அடிப்படையில் வேறுபாடு இல்லை. அணுகுமுறையில் மட்டும் வேறுபாடு உடையவர்கள்.
பாக்கிஸ்தான் பிரிவினை, மும்பைக்கலவரம், பாபர் மசூதி இடிப்பு, குசராத் படுகொலை, ஒரிசா, கருநாடகம், கோவை என பல படுபாதக படுகொலைகளை இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தி வருவதன் மூலம் பா.ஜ.க தன்னை இந்து மதவெறி பாசிசக் கட்சியென நடைமுறையில் நிரூபித்துக் கொள்கிறது. மேலும் அவர்களின் பாசிச விருப்பத்தை ஆர்.எஸ்.எஸ் பெண் துறவி சாத்வி ரிதம்பரா கூறுகிறார் கேளுங்கள். "இந்து ஆண்களே முகமதிய பெண்களை கர்ப்பினியாக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக்கரு ஜெனிக்கட்டும்" இது ஒன்று போதாதா நாம் இவர்களை புரிந்து கொள்ள.
பார்பானி, ஜால்னா, புரனா, அவுரங்காபாத், ஐதராபாத், அஜ்மீர், மலேகான் என முகமதியர் கூடும் இடங்களில் குண்டு வைத்து பல்லாயிரம் பேர்களை திட்டமிட்டு படுகொலை செய்ததன் மூலம் தான் ஒரு இந்துமத பயங்கரவாதி என்பதை அம்பலப்படுத்திக் கொண்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சிங்கள பேரினவாத அரசோடு பல்வேறு ஒப்பந்தங்கள் போட்டும், ஆயுதங்களை அள்ளி வழங்கியும் தமிழினப் படுகொலைக்குத் துணை நின்றது தான், இந்த பா.ஜ.க.
பார்ப்பன இந்து மதத்தை இந்து தேசியத்தை உயர்த்திப் பிடித்துப் பாதுகாப்பதன் மூலம் இங்கு நடைபெறும் இன, தேசிய, சாதிய, பெண்கள், சிறுபான்மை மதத்தவர்கள் மீதான ஒடுக்குமுறையை நேரடியாக அமைப்பு ரீதியாக நடத்துவதன் மூலமும், அதற்கு காரணமாக இருப்பதன் மூலமும் பா.ஜ.க ஒடுக்கப்பட்ட இனங்கள், தேசங்கள், மதங்கள், சாதிகள், பெண்களின் வெறுக்கத்தக்க எதிரியாகவே உள்ளது.
பார்ப்பனர், ஏகாதிபத்திய, தரகு முதலாளிய, நிலவுடைமையாளர்கள் ஆகியோரின் நலனுக்காக செயல்படுவதன் மூலமும், பன்னாட்டு நிறுவனங்களின் தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகளை தான் ஆண்ட காலத்திலும், இன்று தான் ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் தொழிலாளர்களின், விவசாயிகளின், வணிகர்களின் தேசிய முதலாளிகளின் எதிரியாகவே செயல்படுகிறது பா.ஜ.க. இந்த இந்து மத வெறியர்களுக்காக உங்கள் வாக்கு?
அ.இ.அ.தி.மு.க.
அண்ணா - கருணாநிதி வழியில் வந்த, தி.மு.க.வின் வீழ்ச்சி நிலையையே தன் தொடக்க நிலையாகக் கொண்டும், தொடங்கும்போதே இந்திய தேசியத்தை ஏற்றும், இந்திய தரகு முதலாளிகளின் நலன்களை ஏற்றும், பார்ப்பனியத்தை ஏற்றும், வேற்று இன தலைமையில் (மலையாளி எம்.ஜி.ராமச்சந்திரன்) உருவானது தான் அ.இ.அ.தி.மு.க.
அதன் பிறகு தலைமை ஏற்ற பார்ப்பன ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற 10 ஆண்டு கால ஆட்சியே நாம் பார்க்க வேண்டியுள்ளது.
சட்டமன்றத்தில் தன்னை பாப்பாத்தி என்று அறிவித்துக் கொண்டது, மகாமகம் நடத்தி 42 பேரைக் கொன்றது, கோயில் மடங்களில் அன்னதானம், ஆடு, கோழி வெட்டு தடைச் சட்டம், மதமாற்ற தடைச் சட்டம், பாபர் மசூதி இடிக்கவும், ராமர் கோயில் கட்டவும் கல் எடுத்துக் கொடுத்தது. மதவெறியன் நரேந்திர மோடிக்கு விருந்து சமைக்கவும், புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டது போன்ற தமிழர் விரோத பார்ப்பனச் சாதனைகள்.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் 500க்கு மேற்பட்ட பழங்குடிகள் கொலை 100க்கு மேற்பட்ட பாலியல் பலாத்காரம், காவல்துறை, ரவுடிகள் கூட்டுக் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தமிழகம் முழுவதும் பயங்கரவாத பகுதியாக அறிவித்து பேயாட்சி நடத்தியது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ, அவரது கட்சியினர், நெடுமாறன், சுபவீரபாண்டியன், பாவாணன், தாயப்பன், கொளத்தூர் மணி, நக்கீரன் ஆசிரியர் கோபால் என பயங்கரவாத பீதியூட்டி கைது சித்ரவதை என்பதோடு நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது, வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டது என எங்கும் பொடா, தடா என பயங்கரவாத ஆட்சி நடத்தியவர் தான் ஜெயலலிதா.
2 லட்சம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம், பல ஆயிரம் பேர் கைது, 40 பேர் மரணம், சாலை பணியாளர் வேலை நீக்கம், கைது. வேலைக்குத் தடை சட்டம், விவசாயிக்கு எலி கறி, நெசவாளிக்கு கஞ்சி தொட்டி, தொழிலாளர்களுக்குக் கதவடைப்பு வழங்கிய ஜெயா பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை அமுல்படுத்தி ஃபோர்டு , ஹுண்டாய், கோக்ககோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும் செய்து கொடுத்து வரிவிலக்களித்து ஏகாதிபத்திய சேவை செய்து தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமியர்கள், தமிழ் இன உணர்வாளர் மீது ஒடுக்குமுறை என எங்கும் காட்டாட்சி நடத்தியவர்தான் இந்த ஜெயலலிதா.
விடுதலை புலிகளுக்குத் தடை விதித்தது, ஈழ ஆதரவு கட்சிகளுக்கு, ஈழ ஆதரவு செயல்பாட்டிற்குத் தடை விதித்தது, ராஜூ வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்குக் கருணை காட்டக்கூடாது எனக் கூவியது. புலித் தலைவரை கைது செய்ய தீர்மானம், ஈழத்திற்கு ஆதரவாக பேசத்தடை, தமிழ்ச் செல்வன் மரணத்திற்கு கவிதை எழுதியதிற்கு எதிர்ப்பு, பாலசிங்கம் மருத்துவ உதவி பெற தடை என ஈழ விரோத பார்ப்பனச் செயல்களை செய்ததோடு போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் என கொக்கரித்தது. ஈழ அழிப்பு போரில் இந்தியாவிற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு என அறிவித்தவர்தான் இந்த ஜெயலலிதா.
வளர்ப்பு மகனுக்கு 100 கோடியில் திருமணம், பல நூறு ஜோடி செருப்பு, நகை, புடவை என பகட்டு மகாராணியாக உலா வந்த இவரே டான்சி நிலபேர ஊழல் என 40க்கு மேற்பட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் இந்த ஊழல் ராணி. பேயாட்சி நடத்திய தமிழர் விரோத ஜெயாவுக்கா உங்கள் வாக்கு?
தே.மு.தி.க
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.விற்கு மாற்று என கூறி கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் இன்று அ.தி.மு.க வோடு கூட்டணியும், குடியுமாக உள்ளார். இந்திய தேசிய கருத்தோட்டம், தரகுமுதலாளிய வர்க்கத்தன்மை வேற்றின (தெலுங்கு) இனத்தலைமை கொண்ட தமிழர் விரோத கட்சியே தே.மு.தி.க. இது அ.தி.மு.க.வின் நகல் பிரதியே. இவர்களுக்கிடையே உள்ள ஒரே ஒரு வேறுபாடு அது பார்ப்பன தலைமை, இது தெலுங்கு தலைமை.
இ.க.க
இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்ட சமரச, சந்தர்ப்பவாத திருத்தல்வாத கட்சியே இ.க.க.
இ.க.க.(மார்க்சிஸ்ட்)
ஊரெல்லாம் தாராளமயம், தனியார் மயம், உலகமயத்திற்கு எதிராக போராடும் சி.பி.எம். ஆளும் மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் அதை அமுல் படத்துகிற ஏகாதிபத்திய தரகு முதலாளிய சேவையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பது மேற்குவங்கத்தில் தன்னை இந்து என்று அறிவித்துக் கொள்வது, திருப்பூரில் தன் ச.ம.உ மூலம் கோடிகளை குவிப்பது, நிறுவனங்களை நடத்துவது, பார்ப்பனர்களை மட்டும் தலைமைக்கு அனுமதிப்பது, மகரஜோதி ரகசியத்தை சொல்ல முடியாது என மூடநம்பிக்கை வளர்ப்பது, மேற்கு வங்கத்தில் 17 ஆயிரம் தலித்களை கொன்றது. நந்திகிராம், சிங்கூரில் விவசாயிகளை வேட்டையாடியது, தொழிலாளர்களின் போராட்டத்தை காட்டி கொடுத்து நிர்வாகத்திடம் காசு வாங்குவது, இந்திய தேசிய நிலையில் பார்ப்பன பி.ஜே.பி. யின் மறுபதிப்பாக இருப்பது, தமிழருக்கு விரோதமாக செயல்படும் சி.பி.எம் ஒரு பார்ப்பன தரகு முதலாளிய ஏகாதிபத்திய ஆதரவு திருத்தல்வாத கட்சியே. இதன் தமிழ்நாட்டு கிளை வேற்றின தலைமையில் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்
இந்திய அளவில் செயல்படும் கட்சிகளின் கொள்கையை? காங்கிரஸ் வடிவமைத்தது என்றால் தமிழ்நாட்டில் செயல்படும் கட்சிகளின் கொள்கையை (சமரசம், சரணாகதி, சந்தர்ப்பவாதம்) வடிவமைத்தவர் அண்ணாதுரை. தி.மு.க நாட்டு விடுதலைக்காக அமைக்கப்பட்ட கட்சியைத் தவிர அது சட்டசபையை கைப்பற்றி மந்திரி சபையை அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வெறும் அரசியல் கட்சியல்ல (அண்ணா நம்நாடு 02.01.1962) என்று கூறிய தி.மு.க. 1952 தேர்தலில் பங்கேற்கவில்லை, 57ல் நடந்த தேர்தலில் 15 இடங்களையும் 62ல் 50 இடங்களையும் 67ல் குலக்கல்வி ராஜகோபாலாச்சாரியோடு கூடி ஆட்சியைக் கைப்பற்றியது.
திராவிட நாடு கோரிக்கை வைத்திருந்தால் தேர்தலில் நிற்க முடியாது என்பதற்காகவே திராவிட நாட்டுக் கோரிக்கையை கைவிட்ட தி.மு.க. பின்னர் மாநில சுயாட்சி என நழுவி பின்னர் உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கை கொடுப்போம் என பதவி சுகத்திற்காக விழுந்த தி.மு.க. தன் கடவுள் மறுப்பு கொள்கையை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பார்ப்பனர்களுக்கும் சாமரம் வீசியது. அதே போல் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளி ஓட்டுக்காக தமிழ் அடையாளத்தை மறுத்து திராவிடம் பேசி வருகிறது.
1967ல் ஆட்சியில் இருந்து காங்கிரஸ்சை அகற்றிய தி.மு.க. நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என இறங்கி இன்று சோனியா, ராகுல் கண்ணசைவிற்கு கைகட்டி சேவகம் செய்கிறது தி.மு.க.
மதவாத எதிர்ப்பு, சமூகநீதி வேடம் போட்ட தி..மு.க. பா.ஜ.கவோடு கூட்டணி போட்டதோடு, பா.ஜ.க சரியான கட்சி என்றும், RSS சமுதாய இயக்கம் என்று அறிவித்தது. அதே போல் நம்பிக்கை துரோகி, சாதி கட்சி என பா.ம.க. வி.சி.க களை குறிப்பிட்ட கருணாநிதி இன்று அவர்களோடு கூட்டணி தந்து சமூகநீதி பேசுகிறார்.
வீராணம், கூவம் ஊழல் தொடங்கி இன்று 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ஊழல் மூலம் தன் குடும்ப வருவாயைப் பெருக்கி வருகிறது கருணாநிதி குடும்பம்.
தமிழக விளைநிலங்களை முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து 300 கோடியில் தொழில் தொடங்கிய நோக்கியாவிற்கு 650 கோடி வரி சலுகை கொடுத்தது, கலைஞர் காப்பிட்டுத் திட்டம் என்ற பேரில் முதலாளிகள் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க, உலகமய, தாராளமய கொள்கைகளை அமுல்படுத்தித் தமிழ்நாட்டைத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்றுக் கொண்டிருக்கிறது தி.மு.க.
கல்வியைக் கடைசரக்காக்கி விற்கும் தி.மு.க. மதுவை அரசே ஏற்று நடத்தி 2003 - 04ல் 3639 கோடி வருவாயில்? இருந்து 2010ல் 12,491 கோடிகளை வருவாயாக? ஈட்டுகிறது.
தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள், வேலை செய்ய வெளி தேசத்தார் இங்கோ 62 லட்சம் படித்த வேலையற்ற இளைஞர்கள், 2500 வி.ஏ.ஓ பணிக்கு 9 லட்சம் விண்ணப்பங்கள்.
மனைவி, மக்கள், பேரன்களின் ஆட்சிப் பதவிக்காக டெல்லியில் மண்டியிட்டு காரியம் சாதித்த கருணாநிதி
தமிழை ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக போராடியோ, டெல்லியில் மண்டியிட்டோ காரியம் சாதித்தது உண்டா?
காவேரி, பாலாறு, முல்லை பெரியாறு, ஒகேனக்கல் தண்ணீருக்காக போராடியது உண்டா?
தமிழ்நாடு இழந்த எல்லைகளை மீட்க கச்சத் தீவை மீட்க போராடியதுண்டா?
தமிழக மீனவர் படுகொலைகளை தடுத்து நிறுத்தியது உண்டா?
85ல் தமிழருக்கு உதவ தனக்கு ஒரு அரசு இல்லையே என உருகிய கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தடுத்து நிறுத்த போராடியது உண்டா? மண்டியிட்டாவது காரியம் சாதித்தாரா?
இவையெல்லாவற்றிற்கும் இல்லை என்பதே பதில். தி.மு.க தமிழர்களுக்கோ தமிழ்நாட்டிற்கோ செய்தது துரோகம் மட்டுமே!
தி.மு.க ஆட்சியும், அண்ணா நட்டுவைத்த திராவிட தேசியமும் வளர்ந்து விரிந்து தழைத்து மரமாகவில்லை. அது வளர்ப்புள்ள மரமும் அன்று. அது ஏணி மரம் போன்றது, அதை நட்டுவைத்தவர்களை தேர்தல் படிகள் மூலம் பதவிப்பரனுக்கு ஏற்றிவிட்டது.
அதன் தரகு முதலாலிய வர்க்க தன்மை, ஏகாதிபத்திய, நிலவுடைமை, எதிர்ப்பு இன்மை திராவிட தேசியம் இவையே தி.மு.க. வீழ்ச்சிக்கு காரணம். இந்த துரோகிகளுக்கா உங்கள் ஓட்டு?
ம.தி.மு.க
கொள்கை நிலையில் 80களில் தி.மு.க.வின் நகலாகவே ம.தி.மு.க உள்ளது. வேற்றினத் தலைமை, சமரசம், சந்தர்ப்பவாதம், சரணாகதியே இதன் அரசியலாக உள்ளது.
பா.ம.க., வி.சி.க, புதிய தமிழகம்
சாதி ஒழிப்பு, சமூகநீதி, மொழி, இன, உரிமை தன்னுரிமை, தமிழ் ஈழ ஆதரவு, மது ஒழிப்புக் கொள்கைகளை முன் நிறுத்தி உருவாக்கப்பட்டது பா.ம.க, வி.சி.க, புதிய தமிழகம். இவற்றின் தோற்றத்திலும் சாதி குறித்த அணுகுமுறையிலும் இவர்களிடையே வேறுபாடு உண்டு எனினும் அதன் வர்க்க சமூக உள்ளடக்கம் ஒன்றாகவே உள்ளது. இவர்கள் தங்களை ஆளும் வர்க்கமாக மாற்றிக் கொள்வதற்காகவே செயல்பட்டு வருகின்றது. அதாவது தன்னை கருணாநிதியாக மாற்றிக் கொள்ளவே விரும்புகின்றனர்.
இவர்களின் கொள்கைகள் கரைந்து காற்றில் பறந்துவிட்டன. இவர்களின் ஒரே நோக்கம் நிலவும் சமூக தேசிய நிலையிலே தங்களை ஆளும் வர்க்கமாக மாற்றிக் கொள்வதே. இவர்களிடம் மிச்சம் மட்டுமே மிச்சம் இருக்கிறது. தங்கள் மொத்த கொள்கையையும் சந்தர்ப்பவாதத்திற்கும் சரணாகதிக்கும் கொடுத்து தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டனர். இவர்களின் இஸ்லாமிய புதிய நகலாகவே ம.நே.ம.க. உள்ளது. இவர்கள் அனைவரும் கருணாநிதியின் அரசியல் வாரிசுகளே.
கூட்டணியின் கொள்கை
தமிழ்நாட்டில் இவர்கள் அமைக்கும் கூட்டணி இரண்டாக இருந்தாலும் கொள்கை ஒன்றுதான் அவர்களின் வர்க்க சமூக உள்ளடக்கத்தில் சில வேறுபாடுகள் இருந்தாலும் இவர்களின் ஒரே நோக்கம், நிலவும் இந்திய தேசிய நிலையிலும், பார்ப்பன சமூக நிலையிலும் மாற்றம் ஏற்படாமல் பாதுகாப்பது அல்லது அதற்கு உடந்தையாக செயல்பட்டு இந்தியத் தேசியத்திற்கும், தரகு முதலாளிய நிலவுடைமை வர்க்கத்திற்கும், வல்லாதிக்கத்திற்கும் (ஏகாதிபத்தியத்திற்கும்), பார்ப்பனியத்திற்கும் சேவை செய்வதே.
இவர்களின் கூட்டணி ஊழல் செய்வதிலும், மக்களுக்கு எதிராக பன்னாட்டு நிறுவனங்களின் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை அமுல்படுத்தி தமிழ் தேசத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதிலும் ஒன்றாகவே செயல்படுகின்றது.
காவேரி, முல்லைப் பெரியார், பாலாறு, ஒக்கேனக்கல் முதலிய தமிழ்தேசத்தின் ஆற்றுநீர்ச் சிக்கலை தீர்க்கவோ, இழக்கப்பட்ட பகுதிகளையும் தீவுகளையும் மீட்கவோ, மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தவோ, தமிழர்கள் கடலுரிமையை பாதுகாக்கவோ, அனைத்து தளங்களிலும் தமிழை ஆட்சி மொழியாக்கவோ வக்கற்றதுதான் இவர்களின் கூட்டணி. பன்னாட்டு நிறுவனங்களையும், வெளிநாட்டு தொழிலாளர்களையும் இறக்குமதி செய்துவிட்டு தமிழர்களை கூலிகளாக வெளிநாடுகளுக்குத் துரத்தும் அவர்களின் கூட்டணி சமூக பொருளியல் தளத்தில் தமிழர்களை ஒடுக்கியதைப் போலவே அவர்களின் அரசியல் தளத்திலும் தமிழர் தலைமையை மறுத்து வேற்றினத் தலைமையை பாதுகாக்கிறது. தமிழ்தேச மக்களின் தேசிய, அரசியல் பொருளியல் சமூக சிக்கல்களைத் தீர்க்க மறுக்கும் இக்கூட்டணிகள் நம்மை ஏய்க்க நம் பணத்திலேயே நமக்கு இலவசங்களை அள்ளித் தருகின்றன.
இந்திய அரசின் உதவியோடு சிங்கள பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழீழப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ, அதற்கு எதிராக இந்திய அரசை எதிர்த்துப் போராடவோ முன்வராத இக்கூட்டணி தங்கள் அரசியல் லாபங்களையும் பதவிகளையும் தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து தமிழர்களுக்குத் துரோகமிழைத்தது. இவர்களை புரிந்து கொள்ள பெரியார் கூறியதை நினைவுபடுத்தி கொள்வது உதவியாக இருக்கும்.
நாட்டில் ஒரு ஒரு கட்சியைத் தவிர வேறுகட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்க பல பெயர்களில் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கி தின்று வயிறுவளர்க்க வேண்டும் பதவி வேட்டையாடிப் பெருவாழ்வு வாழ வேண்டும் இவை இரண்டும் தான் கொள்கையும் நோக்கமாக இருந்து வருகின்றன. அரசியல் சட்டத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இதுமாத்திரம் இல்லாமல் நடப்புத் திட்டத்தை குறை கூற கூட நம்நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச்சதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது. (பெரியார், விடுதலை 1957)
இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே வேறுபாடு உண்டா என்றால் வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடு டெல்லியை நோக்கிச் செல்லும் தொடர் வண்டியின் இழுவை எந்திரத்திற்கும், அதன் பெட்டிகளுக்கும் உள்ள வேறுபாடாகும். முதல் பெட்டிக்கும், இரண்டாம் பெட்டிக்கும் அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் உள்ள வேறுபாடே இவர்களுக்கு இடையிலான வேறுபாடாகும்.
தொடர் வண்டியின் இழுவை இயந்திரங்களாக காங்கிரசு, தி.மு.க, அ.தி.மு.க செயல்படுகின்றது. மற்ற கட்சிகள் அதன் பெட்டிகளே. இதற்கு மற்ற கட்சிகள் இழுவை எந்திரமாக செயல்படாது என்று பொருளல்ல. அவற்றால் இயலாது என்பதே பொருளாகும். ஆக நமக்குத் தேவை மூன்றாவது அணி அல்ல. இந்திய தேசியத்தை மறுத்து, ஏகாதிபத்திய, தரகு முதலாளி, நிலவுடைமை எதிர்ப்புக்கொண்ட, சோசலிசத்தை நோக்கி முன்னேறக் கூடிய ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம், அனைத்துப் பகுதிகளின் பிரதிநிதித்துவமுடைய பார்ப்பன அதிகார வர்க்கத்தைத் தடை செய்த, வேற்றினத் தலைமையை மறுத்த, 50% பெண்களைக் கொண்ட, உழைக்கும் தமிழர் தலைமை தாங்க, தேசிய முதலாளித்துவத்தை கட்டுப்படுத்தகூடிய விவசாயிகள் தொழிலாளர்களின் தமிழ்தேச குடியரசுக்காக போராட கூடிய மாற்று அணியே!.
காங்கிரஸ் எதிர்ப்பு:
தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ் ஈழ இனப் படுகொலையை நிகழ்த்திய காங்கிரசை தோற்கடிப்பது என்ற கருத்தோட்டமும் நம்மிடையே நிலவி வருகிறது. தமிழ் இன விரோத காங்கிரசை தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் பழி தீர்ப்பது, மற்றவர்களுக்கும் இதை ஒரு எச்சரிக்கையாக மாற்றுவது என்பதே இக்கண்ணோட்டத்தின் விளக்கமா உள்ளது.
ரத்தகறை படிந்த காங்கிரசை தேர்தலில் தோற்கடிப்பது, காங்கிரஸை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்பது என்ற இரண்டு வாய்ப்புகள் நம் முன்னே உள்ளன. தேர்தலில் தோற்கடிப்பது, ஒழிப்பது இரண்டும் ஒன்றுபோல் தென்பட்டாலும் ஒன்றல்ல. காங்கிரசை தேர்தலில் தோற்கடிப்பது என்பது கருவை மரத்தின் கிளைகளை கழிப்பதுதான். ஒழிப்பது என்பது கருவை மரத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடிங்கி எரிவதுதான்.
தேர்தலில் தோற்கடிப்பது அதை ஒழிக்கதான் என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். காங்கிரசை ஒழிப்பது என்றால் அதன் வேராக இருக்கிற பார்ப்பன - பார்ப்பனியத்தை ஒழிப்பது, இந்திய தேசியத்தை ஒழிப்பது, தரகு முதலாளித்துவத்தை ஒழிப்பது, நிலவுடைமையை ஒழிப்பது என்பதே பொருளாகும். இவைகள் காங்கிரசின் வேர்களாக மட்டுமல்ல இங்குள்ள அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளின் வேர்களாக உள்ளன. பா.ஜ.க.வின் வேர்கள் இவையே. காங்கிரசின் திராவிட குட்டிகள் அ.தி.மு.க, தே.மு.தி.க.வின் வேர்களும் இவையே. சில பண்புகள் நீங்கலாக தி.மு.க.வின் வேர்களும் இவையே. இவர்களின் கூட்டாளிகளின் தன்மையும் அதை நோக்கியே உள்ளது.
ஆக காங்கிரசை ஒழிப்பது என்று தீர்மானித்தால் அந்த பண்புகள் கொண்ட அனைத்தையும் ஒழிக்கும் கடமையை நாம் ஏற்க வேண்டும். அக்கடமையை ஏற்கிறோம் என்றால் அனைத்துக் கட்சிகளையும் தோற்கடிக்க நமக்கான மாற்றை உருவாக்கிக்கொள்ள தேர்தலை மறுத்து அமைப்பாய் மாறி போராடுவதே வழி.
இவை இரண்டுக்குமான நடைமுறைகளை கடந்த கால நம்முடைய வரலாறு காட்டுகிறது. காங்கிரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என செயல்பட்ட பெரியார் பார்ப்பன - பார்ப்பனிய ஒழிப்பை இந்திய தேசிய ஒழிப்பை முன் வைத்து செயல்பட்டார் ஏனென்றால் காங்கிரசின் உயிர் தேர்தல் களத்தில் இல்லை இங்கு தான் உள்ளது என்பதால்தான்.
இன்னொரு படிப்பினையும் நம் வரலாறு நமக்கு வழங்கியுள்ளது. அது 1967ல் தேர்தல் களத்தில் காங்கிரசை வீழ்த்திய தி.மு.க. 1967ல் வீழ்த்தியவர்கள் இன்று காங்கிரசின் காலில் விழிந்துகிடக்கிறார்கள் ஏன்? அவர்கள் அடிப்படையை ஒழிக்க விரும்பவில்லை. அதனடிப்படையையே தன் அடிப்படையாக ஏற்றுக் கொண்டார்கள்.
1967ல் கிளைவெட்டப்பட்ட கருவை மரம் மீண்டும் கிளைத்து தழைக்கிறது என்றால், கிளை வெட்டும் வேலையைவிட்டு நாம் வேர் அறுக்க தொடங்குவதுதான் சரியானதாக இருக்கும். இப்பொழுது நாம் தீர்மானிப்போம் நம் வழி பெரியார் வழியா? தி.மு.க வழியா?
தோழர்களே! இவர்களால் நாம் இழந்தது கொஞ்சம் நஞ்சமல்ல. பல லட்சம் இன உறவுகளை, தேசங்களை இழந்திருக்கிறோம். இதன் பிறகும் இவர்களை தேர்தலில்தான் சந்திக்க வேண்டுமா? வீதியில் சந்திக்க மாட்டோமா? அமைப்பாக மாறி இவர்களை நம் வீதிகளில் எதிர்கொண்டு மோதுவோம். தமிழ் இன தேச விடுதலையை சாதிக்க.
49 O - ஒதுங்கிபோ
அரசியல் கட்சிகள் ஆட்சிமீதான நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தியை வடிய செய்வதற்கு கொண்டுவரப்பட்டு பார்ப்பன சேஷன், ஞானியால் புகழப்பட்டு முன் நிறுத்தப்பட்டு இன்று நம்மிடையே உள்ள கருத்தோட்டமாக உள்ள 49 O ஐ பரிசீலிப்போம்.
49 O என்பது இறையாண்மையற்ற சட்டமன்றத்திற்கு நடக்கும் குடியாட்சி தன்மையற்ற தேர்தலையும், போலி குடியாட்சி தேர்தல் முறையையும் ஏற்றுக் கொண்டே தேர்தலில் உள்ள வேட்பாளர்களை புறக்கணிக்கிறோம், என்பதே இதன் பொருள்.
49 O ஐ பயன்படுத்தி இத்தேர்தல் இறையாண்மையற்ற, குடியாட்சி தன்மையற்ற தேர்தல் என்பதை அம்பலப்படுத்த வாய்ப்பற்றது. ஞானி வழியில் அதிருப்திகளில் பதிவு செய்யலாமே ஒழிய வேறெந்த பொருளும் முக்கியத்துவம் அற்றது.
உண்மையில் 49 O பாராளுமன்றம், சட்டமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை பெறுவதன் மூலமாக நிலவும் தேச, சமூக நிலைமைகளில் மாற்றத்தை சாதிக்க முடியும் என்ற பாராளுமன்ற வாதத்தின் ஒரு பகுதியே. பாராளுமன்ற கட்சிகள் என்ன சொல்கின்றன? நாங்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ளோம் ஆதலால் ஆளும் வர்க்கம் அமைதியாக தன் வர்க்க சமூக ஆதிக்கத்தை அதை நிலைநாட்டும் அரசு அதிகாரத்தை ஒரு மாலை நேர விருந்தில் விடைபெறுவது போல விட்டுவிட வேண்டும் என்கிறது.
அதே தன்மையிலேயே 49 O நாங்கள் இவ்வளவு எண்ணிக்கையில் அதிருப்தியாளராக இருக்கிறோம் ஆகையால் ஆளும் வர்க்கம் அமைதியாக விடை பெற வேண்டும். அல்லது நாங்கள் எதையும் செய்யாமலே நல்ல அரசியல் கட்சிகளை, அரசை எங்கள் முன் கொண்டு வர வேண்டும் என்கிறது.
ஆக பாராளுமன்ற வாதத்தின் பகுதியாகவும், வர்க்க சமூக போராட்டத்தை மறுப்பதின் வெளிப்பாடே ஒதுங்கி போகும் இந்த 49 O, வர்க்க சமூக போராட்டத்தில் நாம் ஒதுங்கி போக முடியுமா? மரம் அமைதியை நாடினாலும் காற்று விடுமா?
வாக்களிக்க மறுக்கலாமா
வாக்களித்து மக்கள் தங்கள் இறையாண்மை உள்ள அரசை அதன் அனைத்து உறுப்புக்களையும் தேர்ந்தெடுப்பதையும், தங்களுடைய கட்டுப்பாட்டில், கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதையும், தேர்ந்தெடுத்த உறுப்பினர்களை திருப்பி அழைப்பதையும் நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். அதற்காகவே போராடுகிறோம். நம் தமிழ்நாடு புதுவை சட்டமன்றம் எவ்வித அதிகாரமற்று இருப்பதாலும் நடக்கும் தேர்தல் முறை குடியாட்சி தன்மை இல்லை என்பதாலுமே நாம் வாக்களிக்க மறுக்கிறோம். ஆக நாம் வாக்களிப்பதற்கு எதிராக இல்லை. தவறான, உரிமையற்ற தேர்தலில் வாக்களிக்க மறுக்கிறோம். வாக்களிக்க மறுப்பது நமது சனநாயக உரிமையே.
வாக்களிக்க மறுத்து என்ன செய்யலாம்?
வாக்களிக்க மறுப்பது செயலற்ற தன்மையல்ல. செயலற்ற தன்மைக்கு அமைப்பு பலவின்மையே காரணமாக உள்ளதே ஒழிய கொள்கைக் காரணமல்ல. வாக்களிக்க மறுத்து அமைப்பாய் மாறலாம்! வாக்களிக்க மறுத்து தேர்தல் கட்சிகள், முறையை அம்பலப்படுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம்!, இத்தேர்தல் சூத்திர பஞ்சம, பட்டத்தை ஒழிக்காது என்பதை முன் நிறுத்தி கருவறை நுழைவு போராட்டத்தை நடத்தலாம்!, இத்தேர்தல் கோயில் - மடம் - நிலவுடைமையாளர்களின் நிலத்தை பறிக்காது என்பதை முன் நிறுத்தி நிலம் மீட்பு இயக்கம் நடத்தலாம்!, இத்தேர்தல் சாதியை ஒழிக்காது என்பதை முன் நிறுத்தி சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தலாம்!, இத்தேர்தல் ஆங்கில, இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை ஒழிக்காது என்பதை முன் நிறுத்தி இந்தி, ஆங்கில எழுத்துக்களை அழிப்பது அதை பரப்பு நிறுவனங்களை இழுத்து மூடுவது போன்றவைகளை செய்யலாம்!, இத்தேர்தல் பன்னாட்டு ஆதிக்கத்தை ஒழிக்காது என்பதை முன் நிறுத்தி பன்னாட்டு நிறுவனங்களை இழுத்து மூடலாம்!, 50% பெண்களை வேட்பாளராக அறிவிக்காத கட்சிகளை அம்பலப்படுத்தி மறுக்கலாம்!, வேற்றினத் தலைமை நிலவும் கட்சிகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டு அம்பலப்படுத்தலாம். இதுபோன்று தேர்தலுக்கு வெளியே பல முனைகளில் மக்கள் போராட்டங்களை கட்டி அமைக்கும்போது அரசியல் கட்சிகள் தான் யார் பக்கம் என்பதை அம்பலப்படுத்திக் கொள்வதோடு, அரசியல் கட்சிகளை அதன் ஆடுகளத்திலிருந்து நம் ஆடுகளத்திற்கு இழுத்து வர முடியும் இப்படி பல முனைகளில் அம்பலப்படுத்திக் கொண்டு தேர்தலை மறுத்து நம் இலக்கை நோக்கி மக்களை அணி திரட்டலாம்.
நாம் என்ன செய்யலாம்
இறையாண்மையற்ற தமிழக புதுவைச் சட்டமன்றத்திற்கு வாக்களிக்க மறுப்போம்!
தமிழ்தேசக் குடியரசு அமைக்க அமைப்பாய் மாறுவோம், போராடுவோம்!!
குடியாட்சித் தன்மையற்ற தேர்தல் முறையை மறுப்போம்!
தமிழ்தேசக் குடியரசில் புதிய குடியாட்சித் தேர்தல் முறையை உருவாக்குவோம்!!
தமிழ் தேசத்தில் நிலவும் ஏகாதிபத்திய தரகு முதலாளிய நிலவுடைமை பார்ப்பன சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளை வீழ்த்துவோம்!
தமிழ்தேசத்தில் நிலவும் வேற்று இன அரசியல், பொருளியல், சமூக ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவோம்!!
தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்!!!
மக்களின் பகுதி சமூகச் சிக்கல்களை முன் நிறுத்தி வாக்களிக்க மறுப்போம்!
அரசியலை ஆணையில் வைப்போம் !
அமைப்பாய் அணி திரள்வோம் !!
தமிழர் குடியரசு முன்னணிதொடர்புக்கு ;9840878819
மின்னஞ்சல் ;tamizharkudiyarasumunnani@gmail.com
No comments:
Post a Comment