Wednesday, 23 March 2011

பொதுத்திட்ட முன்வரைவு


அன்பார்ந்த தோழர்களே,

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தமிழர் அமைப்பாய் ஒருங்கிணைவது குறித்து கலந்துரையாடி கொண்டே தமிழர் குடியரசு முன்னணியை ஒருங்கிணைத்து கொண்டுவருகிறோம். நமது பொது புரிதலில் இருந்து இதற்கான ஒருங்கிணைப்பை நாம் மேற்கொண்டோம். நம்முடைய திட்டவட்டமான புரிதல் என்ன, நடைமுறை என்ன என்பதை தீர்மானிக்க வேண்டி இருப்பதன் அடிப்படையில் இப்பொழுது இத்திட்ட முன்வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நமது பொது கண்ணோட்டம் மற்றும் வரையறைகளையும், குறிப்பான திட்டம் குறித்த நமது கண்ணோட்டத்தையும் முன்வைத்துள்ளோம். இத்திட்ட வரைவின் பகுதிகளாக உள்ள தமிழ்ஈழம், மொழி இன சிறுபான்மை தமிழர்கள், பன்னாட்டு தமிழர்கள், அமைப்பு விதிகள், நமது மூன்று கோட்பாடுகள் (தேசியம், சனநாயகம், சோசலிசம்) குறித்தும் இதன் தொடர்ச்சியாக முன்வைக்க உள்ளோம். கடந்த ஆண்டு இதே நாட்களில் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட எமது இன உறவுகளின்  நினைவாக  இவ்வறிக்கையை முன்வைக்கிறோம். அவர்களின் தமிழ்ஈழக்  கனவு தமிழர்களால் ஒடுக்கப்பட்ட உலகமக்களின் துணையோடு நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறோம்.

தோழர்களே இப்பொது திட்ட முன்வரைவு குறித்து தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

தமிழர் குடியரசு முன்னணி

 17.05.2010
  தமிழ்நாடு


 *2010 ஜூலை முதல் அக்டோபர்க்குள் நடந்த நான்கு அமர்வுகளில் திருத்தப்பட்டது.

சர்வதேசியநிலை

1. நம்நேசத்திற்குரிய மனிதச்சமூகத்தின் மீதும் இயற்கை மீதும் அதில் உள்ள ஓவ்வொரு உயிர் உயிரற்ற கூறுகளின் மீதும் அக்கறை உடையவர்களாகவே உள்ளோம். மனிதச்சமூகத்தில் வரலாற்று நிகழ்வு போக்கில் உருவான வர்க்கம், பால், இன, தேசிய, சாதி மத  முரண்பாடுகளே நிலவும் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு மூலமாக உள்ளன. இம்முரன்பாடுகள் சுரண்டுவோர்கும், ஒடுக்குவோர்க்கும் வசதியையும், ஆதிக்கத்தையும் வழங்குவதால் அவர்கள் இந்நிலை நீடிக்க தொடர்ந்து வழி வகுகின்றனர். நாம் இவர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி இம்முரன்பாடுகளை ஒழிப்பதன் மூலம் ஒடுக்குமுறையற்ற விடுதலை பெற்ற மனித சமூகத்தை, மனித சமூகத்தோடு இயந்த இயற்கையை உருவாக்க விரும்புகிறோம்.

2. ஏகாதிபத்தியத்திற்கும் & ஒடுக்கப்பட்ட தேசங்களின் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு, முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள முதலாளி வர்க்கத்திற்கும் & பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான முரண்பாடு இவைகளே இன்றைய உலகை தீர்மானிக்கும் முரண்பாடுகளாக உள்ளன. இவற்றில் ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் மக்களுக்கிடையேயான முரண்பாடே மற்ற முரண்பாடுகளை தீர்மானிக்கும் முரண்பாடாக உள்ளது. அம்முரண்பாடுகள் உலகில் வேறுபட்ட குறிப்பான நிலைகளின் ஊடாகவே செயல்படுகின்றன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்க ஏகாதிபத்தியமே ஒற்றை மேல்நிலை வல்லரசாக நீடிக்கிறது, ஆனால் முழுமையான உலக மேலாதிக்கத்தை பெறும் நிலையில் அது இல்லை. அதே சமயம் பல்வேறு ஏகாதிபத்தியங்கள் அமெரிக்காவுடன் மேலாதிக்கத்திற்கான போட்டியில் உள்ளன, தங்களுக்கிடையேயான போட்டியை பல்வேறு மண்டல, வணிக, ராணுவ, அரசியல் கூட்டுகள், ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச மயப்படுத்தி தங்களுக்கிடையேயான மோதலை பரவலாக்கி வருகிறது. இதன் விளைவாக ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க கண்டங்களில் உள்ள மக்களும் பல்வேறு தேசங்களும், ஒடுக்குமுறையும் சுரண்டலையும் அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் சந்தித்து வருகின்றன. இந்த வகையிலே தமிழர்களும் அவர்களின் தாயகங்களான தமிழகமும் - தமிழ்ஈழமும் ஏகாத்பத்திய அரசியல், பண்பாட்டு, மொழி ஒடுக்கு முறைகளுக்கும், பண்ணாட்டு பொருளாதார சுரண்டலுக்கும் தேசிய ஆக்கிரமிப்புக்கும் உட்படுத்தபட்டு இருக்கின்றன.


தமிழர்கள்

3. தமிழர்நிலை

தமிழர்கள் தொன்மையான நாகரிகத்தையும் தொல்சீர் மொழியையும் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றையும், தனக்கான அடையாளங்களையும் கலை பண்பாட்டையும், அறிவு மரபையும் கொண்ட, தமிழகம், தமிழ்ஈழ தாயகத்தையும் இதுதவிர பல்வேறு நாடுகளில் மொழி இன சிறுபான்மையாகவும் கூலிகளாகவும், அகதிகளாகவும் உலகில் விரிந்து பரந்திருக்கிற ஒர் இனமாவார். அவர்களை நான்காக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

3.1. தமிழக, தமிழ்ஈழ தாயகங்களில் வாழும் தமிழர்கள்.

3.2. பிரிட்டிஷ் ஏகாதியபத்தியத்தால் கூலிகளாக. தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை (மலையக தமிழர்கள்) மொரீஷியஸ், ரீயூனியன், பிரிட்டிஷ் கயானா போனற நாடுகளில் குடியேற்றப்பட்ட மற்றும் வணிகம் செய்ய குடியேறிய தமழர்கள்.

3.3. தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் விளைவாக உலகம் முழுவதும் அகதிகளாக குடியேறிய தமிழர்கள்.

3.4. உடல் உழைப்பு, மூளை உழைப்பு கூலிகளாக, வணிகர்களாக அமெரிக்கா, ஐரோப்பிய, அரபு நாடுகளில் தெற்காசியாவின் பல்வேறு தேசங்களில் வாழும் தமிழர்கள்.

இந்நான்கில் 1, 3, 4 வகைபாட்டில் உள்ளவர்கள் தமிழகம் மற்றும் தமிழ் ஈழத்தை தாயகமாக கொண்டவர்கள். இரண்டாம் வகைபாட்டில் உள்ளவர்கள் தமிழகத்தை வரலாற்று இன தாயகமாக கொண்டிருந்தாலும் தங்கள் குடியேற்றப்பட்ட குடியேறிய நாட்டையே தேசிய தாயகமாக கொண்டவர்கள்.

4. தமிழர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள்

4.1. தமிழர்களின் வரலாற்று தாயகங்களான, தமிழகமும் தமிழ் ஈழமும் பார்ப்பனிய இந்திய அரசாலும், சிங்கள பேரினவாத அரசாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழ் ஈழத்தின் மீது இவ்விரண்டு அரசுகளுமே மேலாதிக்கத்தைக் கொண்டுள்ளன.

4.2. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் பல்வேறு நாடுகளில் குடியேற்றபட்ட தமிழர்களுக்கு வரலாற்று இனத்தாயகமாக தமிழகம் விளங்கினாலும் அவர்கள் குடியேற்றப்பட்ட நாடுகளே அவர்களின் தேசியத்தாயகம். அங்கு தமிழினம் ரத்தம் சிந்தி, வியர்வை இரைத்து, ரப்பர், தேயிலை, காபி தோட்டங்களை வளர்த்ததோடு அத்தேசங்கள் எங்கும் பாதைகள் அமைத்து அத்தேசத்தின் மக்களின் நலனோடு இணைந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் பல தேசங்களில் இன்றும் பெரும்பகுதியினர் கூலிகளாக பஞ்சபாராரிகளாக வாழ்வதோடு, மொழி, இன சிறுபான்மையினருக்கான சனநாயக உரிமைகள் கூட பல நாடுகளில் குறைக்கப்பட்டோ, மறுக்கப்பட்டோ இரண்டாம் தர குடிமக்களாக வாழ்கின்றனர்.

4.3. சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் ஈழ விடுதலைக்காக அறுபது ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் போராட்டத்தின் விளைவாக பெரும்பான்மை ஈழ தமிழர்கள் உலகமெங்கும் தன் தாயகத்தை பொன், பொருளை, உறவினர்களை, உரிமைகளை இழந்து அகதிகளாக குடியேறி உள்ளனர். அவர்களுக்கு சர்வதேச சட்டங்கள் வழங்கக்கூடிய அகதிகளுக்குரிய அரசியல், சனநாயக, குடியியல், உரிமைகள் சில நாடுகளைத் தவிர  பல நாடுகளில் மறுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் சட்ட விரோத குடியேறிகளாக பயங்கரவாதிகளாக நடத்தப்படுகின்றனர்.

4.4. தாய் தமிழ்த்தேசம் பலநூறு  ஆண்டு காலமாக அந்நியர்களின் மேலாதிக்கத்தினாலும், சுரண்டலாலும் அதன் வளர்ச்சி தடைபட்டு இருப்பதோடு தமிழர்களின் அரசியல், பொருளியல், மேளாண்மையை வீழ்த்தியதன் விளைவாக இன்றளவும் தொடரும் பன்னாட்டு, இந்திய சுரண்டலாலும் அண்டை தேசங்களின் அடாவடியாலும் தமிழகத்தின் ஆற்று நீர், உரிமை பறிப்பும், தொழில், வணிகம், வேலை வாய்ப்பில் வேற்றின மேலாதிக்கத்தாலும் தமிழ்நாட்டில் இருந்து துரத்தப்படும் தமிழர்கள் பாலைவனத்தில் கால்நடைகளை மேய்ப்பதும், எண்ணெய் கிணற்றில் தொழிலாளியாய், டெல்லி, மும்பை, பெங்களூர் வீதிகளில் குடிசைகளில் கூலிகளாக வாழ்க்கை நடத்தும் தமிழர்கள் சட்ட விரோத குடியேறிகளாக பதினாறு மணிநேர கடின உழைப்பாளிகளாக, தாக்குதலுக்கு உள்ளாகும் சிறு குடிகளாக நம் இனம் அல்லல்பட்டு வருவதோடு பல நாட்டு சிறைகளில் தன் தேசத்தை இழந்ததால் சிறைபட்டு கிடக்கிறது. இங்கு தன் அறிவிற்கும், தொழிலுக்கும் ஏற்படும் பெரும் தடைகளை தாண்ட முடியாமல் கடல் தாண்டி கொண்டிருக்கிறார்கள். நம் தமிழர்கள் வணிகம் செய்ய அல்ல கூலிகளாக!

தமிழர்கள் தங்கள் தேசத்தை இழந்ததால், பொருளியலை இழந்ததால், உரிமையை இழந்ததால் தங்களுடைய தொல்சீர் மொழியையும், பண்பாட்டையும், அறிவு மரபையும், வரலாற்றையும் ஏன் இனத்தையே ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும், மேலாதிக்கத்துக்கும் இழந்து கொண்டு இருக்கிறது தமிழ் இனம்.

5. ஏகாதிபத்திய சுரண்டல் மற்றும் ஆதிக்கம்

தமிழர்கள் அவர்களின் தாயகங்களான தமிழகம், தமிழ்ஈழ தேசங்கள் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் ஆக்கிரமிப்புக்கு வல்லாதிக்க பார்ப்பனிய இந்திய அரசு, பார்ப்பனிய இந்திய சேதியத்தின் அரசியல், பொருளியல், சமூக நலன்களும், இந்தியாவின் தெற்காசிய மேலாண்மைக்கான போட்டியும், சிங்கள பேரினவாதமுமே காரணமாக உள்ளது. தமிழர்கள் தமிழகம், தமிழ்ஈழ தேசத்தின் மீதான ஏகாதிபத்திய சுரண்டல், ஆதிக்கம் பார்ப்பனிய இந்திய தேசியத்தின் வழியாகவும் சிங்கள பேரினவாத தேசியத்தின் வழியாகவே நிகழ்ந்தேறுகிறது. இவர்களின் நலனும் ஏகாதிபத்திய நலனும் பின்னி பிணைந்த வையாகவே உள்ளன. அதே சமயம் அவை ஒன்றாக இல்லை. இரண்டு நலன்களின் பின்னிப்பிணைந்த தன்மையே அது.

6. தற்போது தமிழர்களின் முன் உள்ள கடமைகள்.

6.1. தமிழக, தமிழ்ஈழ தாயக விடுதலைக்கு போராடுவது

6.2. பல்வேறு நாடுகளை தேசிய தாயகமாக கொண்டுள்ள மொழி, இன சிறுபான்மையினராக உள்ள தமிழர்களின் சனநாயக உரிமைகளை வென்றெடுப்பது.

6.3. அகதிகளாகவும், கூலிகளாகவும், வணிகர்களாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் சனநாயக குடியியல் உரிமைகளை பாதுகாப்பது.

6.4. தமிழர்கள் தங்களிடையே உள்ள வர்க்க, சாதிய, பாலின முரண்பாடுகளைத் தீர்த்து தங்களுக்குள்ளும் தங்களுக்கு வெளியிலும் சமத்துவமாக வாழ்வதன் பொருட்டு தங்களின் மொழி, இனம், நாகரீகம், அறிவு, மரபு, வரலாறு, கலை, இலக்கியம், பொருளாதார நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றின் பிற்போக்கு கூறுகளை ஒழித்து முற்போக்கு கூறுகளை வளர்த்தல்.

6.5. சோசலிசத்தை நோக்கி அணிதிரள்வோம்

அ. தமிழ் இனத்தின் ஆகப் பெருப்பான்மையினர் உழைக்கும் தமிழர் என்ற தன்மையாலும்

ஆ. அவர்கள் சர்வதேசமெங்கும் விரிந்து பரவி இருப்பதன் தன்மையாலும்

இ. அவர்களின் இரண்டு தாயகங்களின் விடுதலை சர்வதேச அரசியல் பொருளியல் தலையீட்டிற்கு உட்பட்டது என்ற தன்மையாலும்.

ஈ. பல்வேறு நாடுகளில் தங்களின் தேசிய தாயகத்தில் மொழி, இன சிறுபான்மையினர் உரிமைகளை வென்று எடுக்க வேண்டியதன் தன்மையாலும்.

உ. பல்வேறு நாடுகளில் அவர்களின் சனநாயக குடியியல் உரிமைகளில் பெற வேண்டியதன் தன்மையாலும்.

ஊ. எல்லாவற்றிற்கும் மேலாக தேசங்களின்,  இனங்களின், உழைக்கும் வர்க்கங்களின், பெண்களின், விடுதலை என்பது சுரண்டல் ஒடுக்குமுறை ஒழித்து மனித குலமும் இயற்கையும் விடுதலை பெறுவது பொதுவுடைமை, சோசலிச கண்ணோட்டத்தாலும் உலக சோசலிச புரட்சியாலுமே இறுதியாக நிறைவு பெறும் என்பதன் தன்மையாலும் தமிழர்கள் பொதுவுடமை கண்ணோட்டத்தை கொள்வதும் உலக சோசலிச புரட்சிக்கு போராடுவதும் அவசியம் இவையே தமிழர்களின் ஐந்து பெரும் கடமையாகும்.

7. தமிழர்களாக அணிதிரள்வது

நாம் தமிழராய் அணிதிரள்வதற்கு இரண்டு அடிப்படை உள்ளது.

7.1. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள் அவர்களின் இரண்டு தாயக தேசமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு நாடுகளில் மொழி, இன சிறுபான்மையினராக உள்ள அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே உள்ளார்கள். அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள், தங்களை ஒன்றாகவே கருதவும் செய்கிறார்கள்.

7.2. தமிழ் தேசிய விடுதலை என்பது சாராம்சத்தில் தமிழர்களின் தேசிய விடுதலை பற்றியதே என்ற காரணத்தாலும், தமிழ்நாட்டில் தமிழர்களே தேசிய விடுதலை சனநாயக புரட்சியின் முதன்மை ஆற்றலாகவும் முதுகெலும்பாகவும் உள்ளார்கள். அவர்கள் தமிழர்களாய் அணிதிரள்வது தமிழ் தேசிய எழுச்சிக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தாலே நாம் இனமாக அணிதிரள்கிறோம்.

இக்காரணத்தால் தேசிய, மொழி, இன சிறுபான்மையினர் அணிதிரட்ட தேவையில்லை என்பது அல்ல இதன் பொருள் நம் உடலில் முதுகெலும்பு மட்டும் இல்லை. மற்ற பல எலும்புகளை கொண்டதே நம் உடல். அதே வகையில் தமிழ் தேசம் என்பது அவர்களையும் உள்ளடக்கியதே. தேசிய விடுதலைக்கு அவர்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகவே இருக்கும். அவர்களோடு ஐக்கியப்பட்டே தேசிய விடுதலையை சாதிப்போம். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் இனம் தன்னை தனியே அணிதிரட்டிக் கொள்வது ஒடுக்குமுறை சுரண்டலுக்கு எதிரானதே ஒழிய மேலாதிக்கத்திற்காக அல்ல. அது இனங்களின் சனநாயக உரிமை, கடமை அதை இனவாதமாக கருதுவது பார்பனிய தரகு முதலாளிய இந்திய கண்ணோட்டமே. அக்கண்ணோட்டம் சனநாயக மறுப்பு கண்ணோட்டமே!

8. அரசியலை ஆணையில் வைப்போம், அமைப்பாய் அணிதிரள்வோம்

தமிழர்களாக ஒருங்கிணைவது என்பது தமிழர்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான ஒரு நடைமுறையாக அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்திலும் தமிழ் ஈழத்திலும் பிறரின் ஆதிக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், புலம்பெயர் தேசங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது, தங்களின் இன பண்பாட்டு வரலாற்று அடையாளங்களை நீட்டித்துக் கொள்வது, அவர்களின் எதிர்காலம் தாயகத்தோடும் பிணைக்கப்பட்டு இருப்பதன் காரணமாகவும் ஆங்காங்கே தமிழர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்கிறார்கள். புலத்தில் இந்த ஒருங்கிணைப்பு முக்கியமாக மொழி பண்பாட்டுத்தளங்களிலேயே நடைபெற்று வந்தது. அதே சமயம் தாயகங்களில் இவற்றோடு சேர்த்து இன, தேசிய விடுதலைக்காக அரசியல் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்திய மேலாதிக்க அரசு, சிங்கள பேரினவாத அரசு, ஏகாதிபத்திய உதவியுடன் தமிழ் ஈழத்தில் நடத்திய தமிழ் இன படுகொலையின் விளைவாக தமிழர்களின் அரசியல் செயல்பாட்டுத் தளம் சர்வதேச அளவில் அரசியல் நடவடிக்கைகளை திறந்துவிட்டிருக்கிறது.  இந்த தளத்தில் தமிழர்கள் சரியாக செயல்படுவதன் வழியாகவே தங்களை தற்காத்துக் கொள்வதும் தாயக விடுதலையை சாதிப்பதும் சாத்தியமாகும். இனிமேல் தமிழர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள மொழி, இன பண்பாட்டு அடையாளங்கள் மட்டும் போதுமானதல்ல. அவர்கள் விடுதலைக்கான அரசியலின் கீழ் ஒருங்கிணைவதற்கான தேவை முன்னுக்கு வந்துள்ளது. அவர்கள் தங்களுக்குள்ளும், தங்களுக்கு வெளியில் உள்ள முரண்பாடுகளுக்கு அரசியல் தீர்வு முன் வைக்க வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் அவர்களின் அமைப்பும் தளர்ந்த தன்மையில் இல்லாமல் தேவையான அளவில் உறுதி தன்மை பெற வேண்டியுள்ளது. அவர்கள் அணிதிரளும் அரசியல் விடுதலை சனநாயக சோசலிச உள்ளடக்கத்தைக் கொண்டதாகவும், உலக சோசலிச இயக்கத்தின் ஓர் அங்கமாகுவும் செயல்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆகவே நாம் அரசியலை ஆணையில் வைப்போம். அமைப்பாய் அணிதிரள்வோம்.

9. யார் தமிழர்

இவ்வினா தமிழ்நாடு தொடர்ச்சியாக தமிழர் அல்லாதவர்களின் குடியேற்ற பகுதியாக விளங்குவதால் எழுந்தது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் குடியேறிய பார்பனர்கள் யார்? 12ஆம் நூற்றாண்டிற்கு பிறகு குடியேறிய தெலுங்கர், கன்னடர் யார். அதன்பின் குடியேறிய மலையாளிகள் மற்ற பிற இனத்தார்கள் யார் என்று வரையறுப்பதில் வந்த குழப்பமே யார் தமிழர் என்ற குழப்பமாக உள்ளது.

9.1. இக்கேள்விக்குரிய பொருன்மை (தமிழர்) என்பவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் வாழ்பவர்கள் இல்லை பல்வேறு நாடுகளில் வாழ்பவர்கள். தமிழ்நாட்டில் வசிப்பவர்களை வைத்து இப்பொருள்மைக்கு விடை தேட கூடாது அதற்கு ஒரு பன்னாட்டு அடிப்படை உள்ளது.

9.2. யார் தமிழர் என்ற வினாவும் யார் தமிழ் தேசியர் என்ற வினாவும் ஒன்றல்ல. யார் தமிழர் என்ற வினா ஒரு மொழி இனத்தை பற்றிய வினாவாகும். யார் தமிழ் தேசியர் என்ற வினா இன்றைய நவீன தேசிய (தமிழ் தேசிய) குடிமக்கள் என்பவர்கள் யார் என்பது பற்றியதாகும்.

9.3. தமிழர் என்பவர்கள் சொந்த குணத்தால் மட்டுமல்ல அதன் எதிர் நிலையாலும் தீர்மானிக்க படுகிறார்கள். தமிழர்கள் - பார்ப்பனர், பார்ப்பனியத்தின் வரலாற்று எதிரியாகவே உள்ளனர். அதே சமயம் நம் தேசிய சிறுபான்மை இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள மக்கள் அவற்றோடு ஒரு சமரச தன்மை கொண்டவர்களாகவே உள்ளார்கள்.

9.4. இன்றைய நிலையில் இக்கேள்விக்கு விடை தேடும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. தமிழர்களுக்கோ தமிழ் தேசிய மக்களுக்கோ முதன்மை எதிரி பார்ப்பன - பார்ப்பனியமும், தரகு முதலாளித்துவ இந்திய தேசியமும் இந்திய அரசுமே ஒழிய அண்டை தேசங்களோ, சகோதர இனங்களோ இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்கொண்ட புரிதலின் அடிப்படையில் யார் தமிழர் என்ற வினாவிற்கு வரலாற்று வழி தமிழை தாய்மொழியாகக் கொண்டு தமிழர் பண்பாட்டு மரபின் தொடர்ச்சியாக உள்ளவர்களையே தமிழர் என வரையறுக்கிறோம்.

10. யார் தமிழ் தேசத்தவர்

தமிழ் தேசத்தில் வாழும் தமிழர்கள், தமிழ் தேசம் மொழி வாரி மாநிலமாக பிரிக்க படுவதற்கு முன்பு குடியேறி தங்களின் தேசங்களோடு தற்போது வரலாற்று, இனப்பண்பாட்டு தொடர்புகளை மட்டும் கொண்டுள்ள மொழி இன சிறுபான்மை இனங்களில் உள்ள கன்னடர், தெலுங்கர், பார்ப்பனர், மலையாளி, குஜராத்தி மற்ற  சிறு எண்ணிக்கையில் உள்ள இனங்கள் ஆகியோர் தமிழ் தேசத்தவரே. அதே சமயம் இவ்வினங்களிலுள்ள ஆளும், அதிகார, முதலாளித்துவ, நிலவுடைமை சக்திகளை நாம் அந்நியர்களாகவே கருதுகிறோம். ஆனால் இவ்வரையறையில் உழைக்கும் மக்களை பொறுத்த வரையில் தளர்வே இருக்கும்.

11. கலப்பினம்

தமிழ் தேசம் தமிழ் ஈழத்தின் மீதான ஆக்கிரமிப்பு காரணமாகவும், வேற்றின குடியேற்கும் காரணமாகவும் தமிழர்கள் தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கையின் காரணமாகவும், தமிழர்களின் ஒருசிறு பகுதி வேற்றினத்தாரோடு இணைந்து வாழ்வது மூலமாக உருவாகும் மனிதர்களை யாராக வரையறுப்பது? தமிழ்நாட்டில் உள்ளவர்களை பொறுத்தவரை அவர்கள் எந்நிலையிலும் தமிழ் தேசியரே. அதே சமயம் அவர்களை தமிழர்களாக பார்க்கலாமா! தமிழ் இனம் என்று ஏதும் இல்லை எல்லாம் கலப்பினம் தான் என்ற கருத்தும் ஒட்டுமொத்த தமிழ் இனமும் தூயது என்ற கருத்தும் முழு உண்மை அல்ல. பகுதி அளவான உண்மையே. இருகோடியிலிருந்து பொருளை பார்ப்பது தவறானதாகும். தமிழர்களுக்கும் தமிழர்கள் அல்லாதவர்களுக்கும் பிறக்கும் வாரிசுகள் தங்களை தமிழர்களோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் போதும் தங்களது திருமண உறவுகளை தமிழர்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் போதும் அவர்களை நாம் தமிழர்களாகவே வரையறுக்கிறோம்.  இந்த முறையியலில் கலப்பினத்தவர்கள் பெரும்பான்மையினரின் வரையறுப்பு குறித்த சிக்கல் தீர்ந்துவிடும். இதில் விதிவிலக்குகள் வந்தே தீரும். இந்த வகையில் நாம் கலப்பினத்தைப் பார்ப்பதே எந்த இனத்தின் மீதும் ஒடுக்குமுறை  இல்லாது போன இனங்கள் மறைந்து மனித குலத்தை நோக்கிய பயணத்திற்கு நம்முடைய பங்களிப்பாக விளங்கும். நாம் போராடுவது இன ஒடுக்குமுறைக்கு எதிராகவே ஒழிய, இன தூய்மைக்காக அல்ல.

12. அகமுரண்பாடுகள்

தமிழர் ஓர் இனம் என்றாலும் வரலாற்று நிகழ்வு போக்கில் தனக்குள் பாலினமாக, வர்க்கங்களாக, சாதிகளாக முரண்பட்டு இயங்கி வருகிறது.

12.1. வர்க்க முரண்பாடுகள்

தரகு முதலாளிய வர்கங்களாக, நில பிரபுத்துவ வர்க்கங்களாக, தேசிய முதலாளித்துவ வர்க்கங்களாக, சிறுமுதலாளித்துவ வர்க்கங்களாக, பல்வேறு விவசாய வர்க்கங்களாகவும், உழைக்கும் வர்க்கங்களாகவும் தமக்குள் முரண்பட்டு இயங்குகிறது. இவர்களில் தரகு முதலாளித்துவ நில பிரபுத்துவ வர்க்கங்கள் இன நலன் தேசிய விடுதலை லட்சியங்களை கைவிட்டு தன் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் வர்க்கங்களாக உள்ளது. இதர வர்க்கங்களின் நலன் இனநலன் தேசிய விடுதலை லட்சியங்கலோடு பின்னப்பட்டதாய் உள்ளது. தமிழ் இனத்தின் ஆக பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் நலன் உலக சோசலிச புரட்சியோடும் தமிழக தமிழ்ஈழ தாயகங்களின் விடுதலையோடும் பினைக்கப்பட்டுள்ளது. இவ்வர்க்கமே தமிழ் இனத்தின் விடுதலையை தீர்மானிக்கும் வர்க்கமாக உள்ளது.

12.2. சாதிய முரண்பாடு

தமிழ் இனத்தில் ஆதியில் சாதியில்லை என்றாலும் பார்ப்பனர் நுழைவின் காரணமாகவும் தமிழ் சமூகத்தில் நிலவிய உற்பத்திமுறையின் காரணமாகவும், பிறப்பு அடிப்படையில் வேறுபாடுடைய ஒன்றின் மீது ஒன்றாகவும், அக்கம் பக்கமாகவும், மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் குறுகி செல்லும் வடிவத்தைக் கொண்டதாகவும். மேல் உள்ள சாதிக்கு ஆண்டையும் கீழ் உள்ள சாதிக்கு அடிமையும் இல்லாத அதே சமயத்தில் அதற்குள் உள்ள நிலைமை தனக்கு மேல் உள்ள ஆதிக்கத்திற்கு அடிமையாகவும், தனக்கு கீழ் உள்ள சாதிக்கு ஆண்டையாகவும் ஒரே நேரத்தில் இரண்டு தன்மைகளை கொண்ட பார்ப்பனிய சாதியமுறை தமிழ் சமூகத்தில் நிலவுகிறது. இச்சாதிய சமூக அமைப்பு தமிழர்களை பார்ப்பனர்களின் அடிமைகளாகவே வைத்துள்ளது. இச்சாதிய சமூக அமைப்பு சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைக்காகவே உள்ளது. தமிழர்களை நிரந்தரமாக பிரித்து வைத்திருக்கும் பார்ப்பனிய சாதிய சமூக அமைப்பை ஒழிப்பதின் மூலமாகவே நிபந்தனையற்ற ஒற்றுமையை உருவாக்க முடியும். பார்ப்பனிய சாதிய சமூகத்தை ஒழிப்பது என்பது பார்ப்பனியத்தை, பார்ப்பனிய நிலவுடமையை, தரகு முதலாளித்துவத்தை, அதற்கு காவலாக உள்ள அரசு அதிகாரத்தை ஒழிப்பதே. இவற்றில் ஒன்றை மட்டும் ஒழிப்பது என்பது சாதி ஒழிப்பாகாது. (நீண்ட காலம் தாயகங்களில் இல்லாத தமிழர்களை பொறுத்த வரை நிலைமை வேறுபாடானது).

12.3. பாலின முரண்பாடு

இரண்டாம் தர குடிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் தமிழ் இனம் தன்னில் சரிபாதி பெண்டிரை இரண்டாம் தர குடிகளாகவே நடத்தி வருகிறது. தாய்வழி மரபில் வந்த தமிழ் இனம் தந்தைமை வழி ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழர்களின் ஏடறிந்த வரலாறு எந்த அளவுக்கு தொன்மையானதோ அதில் சற்றேக் குறைய காலம் தொடங்கி இத்தந்தைமை வழி ஆதிக்க ஒடுக்குமுறை வரலாறு தொடர்ந்து கொண்டே உள்ளன. இன்றைய வல்லாதிக்க நுகர்வுப் பண்பாடும் பெண்ணை ஒடுக்குகிறது. இதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள தொடங்காமல் தன் இன விடுதலையையோ தன் மண் விடுதலையையோ தமிழ் இனம் சாதிக்க முடியாது. தந்தைமை வழி ஆதிக்க ஒழிப்பு பெண் விடுதலை என்பது பார்ப்பனிய இந்துமத ஒழிப்பை பார்ப்பனிய நில உடமை, முதலாளித்துவ உற்பத்திமுறை ஒழிப்பை சாத்திய படுத்துவதோடு தேசங்களின் விடுதலை சாதிப்பதன் ஊடாகவே தந்தைமை வழி ஆதிக்க ஒழிப்பையும் பெண் விடுதலையையும், திருநங்கைகளின் சனநாயக குடியியல் உரிமைகளையும் சாத்திய படுத்த முடியும். பெண்கள் தனிவிடுதலை கோட்பாடு இதுநாள்வரையில் விழலுக்கு இரைத்த நீராகவே உள்ளதால் தேசவிடுதலை, சனநாயக, சோசலிச புரட்சிப் பாதையில் பெண் விடுதலைக்கு அணிதிரள்வோம்.

தமிழ் இனம் வர்க்கங்களாக சாதியாக பாலினமாக முரண்பட்டு இயங்குவது நம் இனத்திற்கு நமது தேசிய விடுதலைக்கு அதன் சர்வதேச சனநாயக கடமைக்கு தடையாகவே உள்ளது என்பது உண்மையே. வரலாற்று வழியில் தோன்றிய இம்முரண்பாடுகள் அதன் வழியில் தீர்க்கப்படுவது சாத்தியமே. நாம் முரண்பாடுகளை கண்டு வெறுக்கிறோம். தீர்க்க விரும்புகிறோம். இம்முரண்பாடுகளை விமர்சனம் செய்பவர்களை ஆதரிக்கிறோம். அதே சமயம் முரண்பாடு மட்டுமே உள்ளது இனம் இல்லை என்ற வாதத்தை மறுக்கவும். எப்படி சுரண்டல் ஒடுக்குமுறைக்கான வரலாறு எம்மிடமுள்ளதோ அதே போல் விடுதலைக்கான வரலாறு எம்மிடம் உண்டு என்பதை உறுதியாக முன்வைப்பதோடு அவ்விடுதலை வரலாற்றின் வாரிசுகளாகவே எம்மை கருதுகிறோம். எம்மிடமுள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதன் வழியே தமிழக, தமிழ்ஈழ தாயக விடுதலைக்கும், சனநாயக, உலக சோசலிச புரட்சிக்கும் தமிழ்இனத்தை நாங்கள் வழிநடத்துவோம்.

தமிழ்நாடு

13. தமிழ்நாடு

நமது அன்பிற்குரிய தாய் தமிழகம் தொன்மையான வரலாற்றுக்குரியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மனித கூட்டம் தோன்றி வளர்ந்த இடமே நம் தாயகம். மேற்கில் இருந்து கிழக்காக சரிந்திருக்கும் நிலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் திணைக்குரிய பகுதிகளையும், காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற பெருநதிகளையும், வெப்ப மண்டலத்தில் விரிந்து பரந்த கடலையும், வானுயர்ந்த மலைகளையும், அடர்ந்த காடுகளையும், உயிர்ப்பான மண் வளத்தையும், பல்லுயிர் வளத்தையும், தாது வளத்தையும் பெற்றது அன்னைத் தமிழ்நாடு. தொல்சீர் மொழியையும், கலை இலக்கியத்தையும் அறிவு மரபையும், நாகரீகத்தையும் ஒருங்கே பெற்ற ஆறரை கோடி உழைக்கும் தமிழ் மக்களை கொண்டதாகவே உள்ளது. கடலாலும், நிலத்தாலும் சூழப்பட்டுள்ள தமிழ்நாட்டின் தெற்கே கடலும் கடலைக் கடந்து தமிழ்ஈழ தேசமும், தென்மேற்கே மலையாள தேசமும், வடமேற்கே கன்னட தேசத்தாலும், வடகிழக்கே ஆந்திர தேசத்தாலும், நமது நேசத்துக்குரிய தேசங்களாலும், கடல் அன்னையாலும் சூழப்பட்டு விளங்குகிறது நம் தாயகம்.

14. தமிழக அரச மரபு

சங்ககாலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய அரச மரபுகளும், வேந்தர்களும், அதன்பிறகு பல்லவர்கள், கலப்பிரர்கள் பிற்கால பாண்டிய, சோழ பேரரசுகளும் நிலவி வந்தன. இதில் கலப்பிரர் பல்லவர் அரச மரபினர் தமிழர் அல்ல என்று சொல்லப்பட்டாலும் அக்காலத்தில் தமிழகத்தில் பெருமளவில் வேற்று இன குடியேற்றம் நிகழவில்லை. பிற்கால பாண்டிய, சோழ அரச மரபிற்கு பிறகு சில சிற்றரசர்களும் டில்லி, சுல்தானிய ஆட்சியும், விஜயநகர ஆட்சியும், ஆங்கிலேயர், இந்திய ஆட்சி என பன்னிரென்டாம் நூற்றாண்டிற்கு பிறகு இன்று வரை அந்நிய ஆட்சியே நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக இங்கு நிகழ வேண்டிய அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சி தடைபட்டு பல்வேறு குடியேற்றங்கள் ஏற்பட்டு தமிழக அரசியல் பொருளியல் சமூக நிலை சிக்கலான தன்மையை அடைந்துள்ளது.


15. பார்ப்பனர் - பார்ப்பனியம்

தமிழகத்தில் முதலில் நுழைந்த அந்நியர் பார்ப்பனர்களே.  தொடக்கத்திலிருந்தே தமிழ் சமூகத்தில் பண்பாட்டு தளத்திலும், கருத்தியல் தளத்திலும் தங்களின் ஆளுமையை செலுத்த தொடங்கிய பார்ப்பனர்கள் முதலில் பல்லவர் காலத்தில் பின்னர் பிற்கால பாண்டிய, சோழர் காலத்திலும் தங்களுடைய அதிகாரத்தை பண்பாட்டு தளத்தில் வலுப்படுத்தியதோடு (பிறப்பு அடிப்படையிலான வேறுபாடு, ஆண் பெண் வேறுபாடு, பார்ப்பனிய மதக்கோட்பாடுகள்) வழிபாட்டு தளங்களிலும், நிலத்திலும், அதிகாரத்திலும் அதிகாரத்தைப் பெற்றனர். அதன்பின் வந்த அனைத்து அந்நிய ஆட்சிகளோடும் இணைந்து பார்ப்பனர்கள் தங்களை முதன்மைப்படுத்தி நிலைநிறுத்திக் கொண்டனர்.

அவர்களின் மேலாண்மையால் தமிழ்ச் சமூகம் பார்ப்பனிய மயமாக்கப்பட்டது அதன் விளைவாக பார்ப்பனர்களின் கருத்துக்களை (பார்ப்பனியம்) ஏற்றுக் கொண்ட பிரிவும் தமிழர் மத்தியில் உருவாகி வளர்ந்து வந்தது. பார்ப்பனிய எதிர்ப்பு தொடக்கத்திலிருந்து இருந்து வந்தாலும் அவர்களின் மேலாண்மையின் விளைவாக பார்பனியமே சமூகத்தை ஆட்சி செய்தது.

பார்ப்பன எதிர்ப்பு என்பது பிறப்பு அடிப்படையில் தங்களை மேல்தளத்தில் நிறுவி கொண்ட பார்ப்பன எதிர்ப்பாகும். பார்ப்பனிய எதிர்ப்பு என்பது பார்ப்பனர்களின் கருத்துக்களையும், அதை ஏற்று செயல்படுத்துபவர்களையும் எதிர்ப்பதாகும்.

பார்ப்பனியம் என்பது அதை பிரசவித்தவர்கள் மட்டுமல்லாமல் விளைவிப்பு முறையில், சாதிய ஒடுக்குமுறையில் , பெண்கள் மீதான ஒடுக்குமுறையில், தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்குமுறையில், மொழி, இன பண்பாட்டு ஒடுக்குமுறையில் என எங்கும் பரவியதாய் உள்ளது. அது முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட வேண்டிய நச்சுக்கிருமி.

பார்ப்பனர்கள் பெற்றெடுத்த பார்ப்பனியம், உற்பத்தியில், அதிகாரத்தில், கல்வியில் இனத்தில், மொழியில், மதத்தில், கடவுள் வழிபாட்டில், பண்பாட்டில், சாதிய உச்சிநிலையில் பார்ப்பனர்களுக்கு தனி உரிமையை வழங்குகிறது.

பார்ப்பனர்களின் தனி உரிமை பார்ப்பனியத்தை பாதுகாக்கிறது. இத்தனியுரிமைக்கு எதிரான போராட்டம் பார்ப்பனிய ஒழிப்பை நோக்கமாக கொண்ட பார்பன எதிர்ப்பு போராட்டமே!

பார்ப்பன ஒழிப்பை நோக்கமாக கொண்டு பார்ப்பனர்கள் தங்களுடைய தனி உரிமையை (ஆதிக்கம்) துறந்து போராடினாள் அதை நாம் ஆதரிக்கலாம். ஆதரிக்கும் அதே சமயம் அவர்களுக்கு தனியுரிமையை வழங்கும் பார்ப்பனியும் புறநிலையில் ஒழிக்கபடும் வரை அவர்கள் தலைமை ஏற்றபதை மறுக்க வேண்டும் (இருப்பில் மூலதனத்தை வைத்துள்ள முதலாளி தொழிலாளி வாழ்க்கை வாழ்வதால் தொழிலாளி ஆகி விட முடியாது அவன் மூலதனத்தை இழக்கும் பொழுது தான் தொழிலாளி ஆகிறான்).

பார்ப்பன எதிர்ப்பு இல்லாத பார்ப்பனிய ஒழிப்பு போராட்டம் முழுமையானது அல்ல, அதே போல் பார்ப்பனிய ஒழிப்பு இல்லாத பார்ப்பனிய எதிர்ப்பு பகுதி அளவானதே.

பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் வரை பார்ப்பனர்களின் தனியுரிமை நீடிக்கும் இத்தனியுரிமை நீடிக்கும்வரை பார்ப்பன எதிர்ப்பு அவசியமே!

ஆக நம் நிலைபாடு பார்ப்பனியம் ஒழிக்கபட வேண்டும், பார்பனிய ஒழிப்பை நோக்கமாக கொண்டு பார்ப்பனர்கள் எதிர்க்கபட வேண்டும்.

16. ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு

12ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தை ஆக்கிரமித்த அந்நியர்களிடையே ஆங்கிலேயர்களுக்கும், பிறருக்கும் இடையே அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது. முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக தனது உற்பத்தி பொருளுக்கான சந்தை தேவைக்காகவும், மூலதன திரட்டலுக்காகவும், கச்சா பொருளுக்காகவும் அவர்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்க தொடங்கி பின்னர் இத்துணை கண்டம் முழுவதையும் ஆக்கிரமித்தனர் அவர்களை நிர்வாக வசதி என்ற பெயரில் இந்தியா என்ற நிர்வாக அலகை உருவாக்கினர். அந்த விதமான ஒருங்கிணைப்புக்கு பார்ப்பணரும், பார்ப்பணிய கருத்தியலும் ஆங்கிலேயரை சார்ந்து இயங்கிய முதலாளிய வர்க்கத்திற்கும் உகந்ததாக இருந்ததன் விளைவாக அக்கட்டமைப்பை அவர்கள் உயர்த்தி பிடித்தனர்.

17. கடந்த நூற்றாண்டு தமிழ்ச் சமூக இயக்கம்

கடந்த நூற்றாண்டு தமிழ்ச் சமூகத்தின் இயக்கம் இனவிடுதலை, தேசிய விடுதலை, சமூக விடுதலை, வர்க்க விடுதலையை மையமிட்டே இயங்கி வந்துள்ளது. ஆனால் அவை ஒன்றுக்கும் மற்றவைக்கும் உள்ள உறவை மறுத்து தனி தனியானதாக அவற்றை பார்த்தனர். பலநேரங்களில் அவை சந்தித்துக் கொண்டாலும் அவை ஒருங்கிணைந்த அரசியலாக வளர்ச்சி பெறவில்லை. இன்றும் தனித்தனியான விடுதலை என்ற கண்ணோட்டமே ஆதிக்கம் செலுத்தும் தன்மையாக உள்ளது. இக்கண்ணோட்டம் தேசிய விடுதலை, இன விடுதலை, வர்க்க விடுதலை, சமூக விடுதலை, பெண்கள் விடுதலை ஆகிய அனைத்தும் ஒரு பொருளின் பல்வேறு கூறுகளாக பார்க்க மறுத்து தனித்தனியான பொருளாக பார்த்ததன் மூலம் அவற்றுக்கிடையே உள்ள உறவை, ஓர்மையை பார்க்க மறுத்து ஒன்றை மற்றதின் எதிராக நிறுத்தியதன் மூலம் பார்ப்பணிய, தரகு முதலாளிய, இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளன. இந்நிலை அகநிலை இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தின் விளைவே ஆகும்.
 
18. தமிழ் தேசிய தந்தை பெரியார்

தமிழ் மக்களால் அன்போடு தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களை நாம் தமிழ் தேசிய தந்தை என வரையறுக்கிறோம், வழங்குகிறோம். தமிழகத்தின் பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் பல சிந்தனையாளர்கள் தலைவர்களின் தொடர்ச்சியாகவும், முறிவாகவும் தந்தை பெரியார் திகழ்கிறார். அவர் வாழ்ந்த காலகட்டம் நவீன தமிழ் தேசத்தின் திட்டவட்டமான உருவாக்க காலகட்டமாக உள்ளது. 1938 முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் "தமிழ்நாடு தமிழர்க்கே" என வலியுறுத்த தொடங்கி தனது இறுதி பேருரை வரை தமிழ்நாடு தமிழர்க்கே என முழங்கி வந்தார். இடையில் அவர் எழுப்பிய திராவிட நாடு கோரிக்கை சாராம்சத்தில் தமிழ் தேசிய கோரிக்கையே! அவர் தமிழ் தேசிய விடுதலைக்காக மட்டும் போராடவில்லை. பார்ப்பனர் - பார்ப்பனிய ஒழிப்பிற்காக, சாதி ஒழிப்பிற்காக, பெண் விடுதலைக்காக போராடினார். ஜமீன்தார் ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார். சமதர்ம பொதுவுடமை வேலைதிட்டத்தை முன்வைத்தார். அவர் சாதி ஒழிந்த, பெண்கள் விடுதலை பெற்ற, சமதர்ம சமூகத்தைக் கொண்ட, விடுதலை பெற்ற தமிழ் தேசத்தையே கனவு கண்டார். அவர் தமிழ் தேச விடுதலைக்காக மட்டுமல்ல தமிழ் தேசிய மக்கள் விடுதலைக்காகவும் தன் ஆயுளை அற்பணித்தார். அவர் தமிழர்களின் சாரத்தையே தன் சாரமாக கொண்டார். அவரின் சிந்தனை, வாழ்க்கை நவீன தமிழ் தேசத்திற்கு விளக்காய் அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே தந்தை பெரியாரை தமிழ் தேசிய தந்தை என அழைக்கிறோம். அவர் பிற்பட்டவர்களின் தலைவர், கன்னட இனத்தை சேர்ந்த அவர் எப்படி தமிழ் தேசிய தந்தையாக முடியும், அவர் ஏகாதிபத்திய சார்பாளர் இந்த வகையான அனைத்து வாதங்களையும் உறுதியாக மறுக்கிறோம். அவர் பெரியார் என்பதை நினைவூட்டுகிறோம்.

19. அந்நியர் ஆதிக்கம்

12ம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை தமிழகம் தன் இறையாண்மையை இழந்து நிற்பதோடு தமிழர்களும் தங்களின் அரசியல் பொருளியல் பண்பாட்டு மொழி நில உரிமைகளை இழந்து தங்களின் இயல்பான அரசியல், பொருளியல், சமூக, பண்பாட்டு, தேசிய, வளர்ச்சியை அடைய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. இறையாண்மையை இழந்த நாளிலிருந்து அதற்கான போராட்டம் தொடங்கிவிடினும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே மொழி, இன, தேசிய, அரசியல், பொருளியல், சமூக விடுதலைக்கான திட்டவட்டமான கோரிக்கைகள் எழ தொடங்கிவிட்டன. அக்கோரிக்கைகள் மொழி, இன, சிறுபான்மையினரையும் இணைத்த தேசிய கோரிக்கையாகவே வளர்ந்து வந்துள்ளது. அதே சமயம் தமிழ் தேசிய சிக்கல் என்பது தமிழர்களின் தேசிய சிக்கல் என்பதை உணர்த்தியுள்ளது.


20. இந்திய தேசியம்

இந்தியா என்பது வரலாற்றில் இல்லாத ஒன்று. அது ஆங்கிலேயரின் பீரங்கி முனையில் உருவான நிர்வாக அமைப்பு. வேறுபட்ட வரலாறுகள், நாகரீகம், இனங்கள், மொழிகள், மதங்கள், உற்பத்தி  முறை, வேறுபட்ட அரசுகள், அரசியல் போக்குகள் வேறுபட்ட தேச நலன்கள் கொண்ட மக்கள் கூட்டத்தை தன் சுரண்டல் தேவைக்காக தேசம் என்ற போர்வையில் இந்தியா என்ற ஒரே  சிறையில்தள்ளி  இங்குள்ள பார்ப்பனர் தரகு முதலாளிய சக்திகளோடு இணைந்து ஏற்படுத்தி நிர்வகித்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம். ஏகாதிபத்தியம் இங்குள்ள தரகு முதலாளிகள் பார்ப்பனர் பார்ப்பனிய சக்திகளின் அரசியல் பொருளியல் சமூக ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்டதே இச்செயற்கை இந்திய தேசம். அது இயற்கையானது இல்லை மொழி வழி தேசியமே இயற்கையானது. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பார்ப்பன - பார்ப்பனிய தரகு முதலாளிய கும்பலுடன் இணைந்து பெற்றெடுத்த கள்ள குழந்தை தான் இந்திய தேசம்.

21. ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் இந்தியா உருவானதா?

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் இத்துணை கண்டத்தில் ஒரே படித்தான நிலையில் நடைபெறவில்லை என்பதே உண்மை. தமிழர்கள் வங்காளிகள், பஞ்சாபிகள், மாராட்டியர்கள், காஷ்மிரிகள், அஸ்ஸாமியர்கள், நாகர்கள், பழங்குடிகள் ஒடுக்கப்பட்ட சாதிகள், இஸ்லாமியர்கள் அனைவருமே தங்களின் சொந்த மொழி, இன, மத, சாதிய, தேசிய நிலைகளின் ஊடாகவே தங்களின்  போராட்டத்தை நடத்தினர். அவர்களின் விருப்பமும் சொந்த மொழி, இன, தேசிய, மத, சாதிய விடுதலையையே நோக்கமாக கொண்டு இருந்ததே ஒழிய இந்தியதேசிய விடுதலை என்பது அவர்களின் கருத்தாக, நடைமுறையாக இல்லை. அது பார்பண - பார்பணிய தரகு முதலாளிய சக்திகளின் விருப்பமாகவும் நடைமுறையாகவுமே இருந்தது.

அண்டையில் ஐம்பது ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது கூட, இவர்கள் சொல்லும் இந்தியாவில் தமிழகம் தவிர வேறு எவரும் எந்த அசைவையும் வெளிப்படுத்தவில்லை. மக்கள் மட்டும் அல்ல புரட்சிகர சனநாயக இயக்கங்கள் கூட உருப்படியான நடைமுறையை கொள்ளவில்லை. அதே கதியே லட்சகணக்கான இளைஞர்களை இழந்துகொண்டு இருக்கும் காஷ்மீர், வடகிழக்கு, பஞ்சாப் தேசங்களின் நிலையும். அங்கே அவர்கள் கொல்லப்படும் பொழுது இவர்களின் இந்தியா உறங்கிக் கொண்டே இருந்தது, இருக்கிறது. அதே கதியே, குஜராத்தில் இஸ்லாமியர்கள், ஒரிஸாவில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்ட பொழுதும் நிகழ்ந்தது.

அதே சமயம் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்காக, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவும், பாகிஸ்தானை எதிரியாக கருதுவதில், கிறிஸ்துவர்களை ஏமாற்று பேர்வழிகளாக பார்ப்பதில், தமிழர்களை இனவாதிகளாக சித்தரிப்பதில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அணிதிரள்வதில் இவர்கள் சொல்லும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உருவான இந்தியா ஒன்றாக இருக்கிறது. அப்படி என்றால் இதன் பொருள் என்ன? இந்தியா ஏகாதிபத்திய எதிர்ப்பில் உருவாகவில்லை இஸ்லாமிய எதிர்ப்பில், கிறிஸ்துவ எதிர்ப்பில், தமிழர் எதிர்ப்பில், அஸ்ஸாமிய, நாகா எதிர்ப்பில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான எதிர்ப்பில், பழங்குடிகளுக்கு எதிரான எதிர்ப்பில், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு எதிரான எதிர்ப்பில் உருவாக்கப்பட்டதே இந்திய தேசியம். ஆக பார்ப்பண - பார்ப்பணிய தரகு முதலாளிகளின் தேசியமே இந்திய தேசியம். ஏகாதிபத்திய எதிர்ப்பில் இந்தியா உருவானது என்ற கருத்து பார்ப்பன - பார்ப்பனிய தரகு முதலாளிய ஏகாதிபத்திய சார்பாளர்களின் கருத்தே!

22. 1947 அதிகார மாற்றம்

1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை என்பது உண்மையில் இரண்டாம் உலக போரின் விளைவாக ஏகாதிபத்தியங்கள் பழைய பாணியில் உலகை ஆள முடியாத பொழுது அந்த அந்த தேசிய இன மக்களிடம் அதிகாரத்தை அளிக்காமல்,  ஆங்கில ஏகாதிபத்தியம் இந்திய தரகு முதலாளிகள், பார்ப்பண - பார்ப்பணிய கூட்டாளிகளிடம் அதிகார மாற்றத்தை செய்ததையே இவர்கள் விடுதலை நாள் என்கிறார்கள். ஆக கூட்டாளிகளிடையே ஏற்பட்ட ஓர் அதிகார மாற்றம். இங்குள்ள மக்கள் எந்த இலட்சியத்திற்காக போராடினார்களோ அவை இன்றும் நிறைவேற்றப்படவே இல்லை. அது பெயர் அளவிலான விடுதலை கூட கிடையாது என்பதே உண்மை. அது கூட்டாளிகளிடையே ஏற்பட்ட அதிகார மாற்றம். மக்களை பொறுத்த வரை அது போலியானதே.

23. 1947க்கு பிறகான மாற்றம்

1947க்கு பிறகான இந்தியா, இந்தியஅரசு என்பது தரகு முதலாளிகள் பார்ப்பண - பார்ப்பணிய பணியாக்கள் கூடாரமே. அது தேசங்களின் விடுதலையை மறுக்கின்ற, மக்களின் விடுதலையை மறுக்கின்ற, பார்ப்பண - பார்ப்பணிய தரகு முதலாளிகளின், அரசியல், பொருளியல் ஆதிக்கத்திற்கான சமூக சக்திகளின் கட்டமைப்பே. அக்கட்டமைப்பு பார்ப்பணிய நிலவுடமைக்கு உகந்ததாகவே உள்ளது. அக்கட்டமைப்பு அவர்களின் நலன்களுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனால் மக்களுக்குச் சேவை செய்ய முடியாது. இந்தியாவிற்குள் இருந்துகொண்டே பார்ப்பண பார்ப்பணியத்தை தரகு முதலாளித்துவ, நிலவுடமையை ஒழிக்க முடியாது. இந்தியா இருந்தால் இவையும் இருக்கும். இவை ஒழிய வேண்டுமானால் இந்தியாவும் ஒழிய வேண்டும். பார்ப்பண - பார்ப்பணிய தரகு முதலாளிகளின் அரசியல் பொருளியல், சமூக மேலாதிக்கத்தை தகர்த்தால்தான் அக்கட்டமைப்பு தகரும். அக்கட்டமைப்பை தகர்த்தால் அவர்களின் மேலாதிக்கம் தகரும்.

24. தேசங்கள் குறித்து இந்தியாவின் பார்வை

இந்திய அரசு இத்துணைக்கண்டத்தின் அனைத்து தேசங்களையும் மாநிலம் என்றே அழைக்கிறது. தான் விரும்பும் எந்த நிலப்பகுதியையும் மாநிலம் என உருவாக்கும் அதிகாரத்தையும் பெற்று இருக்கிறது. மத்திய, மாநிலத்திற்கு என, பொதுச்சட்டம், தனிச்சட்டம் என அட்டவணைபடுத்தினாலும் கூட இறுதியில் மத்திய சட்டமே செல்லும் என்ற நிலையில் மாநிலம் என்பது எவ்வித அதிகாரமும்மற்ற பொம்மை அரசே! தமிழ்நாட்டில் நிலவும் மாநில அரசும் ஒரு பொம்மை அரசே! அது எந்தவித இறையாண்மையும் அற்றது. அதே சமயம் அனைத்து இந்திய கட்சிகள் பலவீனமடைந்து வருவதும் இந்திய தேசியத்தின் முகவர்களாக செயல்படும் மாநில கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் பலம் பெற்று வருவதும் கவனத்தில் கொள்ளதக்கது.

25. விடுதலையின் போக்கு

அத்தகர்வு தனித்தனி தேசிய வடிவிலேயே நிகழ்ந்தேறும். இங்குள்ள தேசங்களின் உள்ளடக்கம் வேறுபட்டதாய் உள்ளது. மத அடிப்படையிலான உள்ளடக்கத்தையே காஷ்மீர் தேசிய விடுதலை கொண்டுள்ளது. மத, தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான உள்ளடக்கத்தையே வடகிழக்கு தேசியங்களின் விடுதலை கொண்டுள்ளது. பார்ப்பன - பார்ப்பனிய எதிர்ப்பு மத மறுப்பு, இன மீட்சி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சனநாயக புரட்சி உள்ளடக்கத்தையே தமிழ் தேசிய விடுதலை தனது போக்காக கொண்டுள்ளது. இங்குள்ள மற்ற தேசங்களின் உள்ளடக்கமும் மாறுபட்டதே. ஆக விடுதலை என்பது தேசிய வடிவிலே நிகழ்ந்தேறும்.


26. தமிழ் தேசத்தின் மீதான இந்திய மேலாதிக்கம்

தமிழ் தேசத்தின் மீது ஆங்கில ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை தொடர்ந்து பார்ப்பண - பார்ப்பணிய இந்திய மேலாதிக்கம் நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த எஜமான மாற்றத்தால் தமிழர்களுக்கோ தமிழ்த்தேசத்திற்கோ எவ்வித விடுதலையும் இல்லையென கருதியே ஆகஸ்ட் 15 துக்கநாள் என சரியாகவே அறிவித்தார் தந்தை பெரியார். இந்திய மேலாதிக்கத்தின் விளைவாக தமிழர்கள் தமிழ் தேசத்தின் மீது அரசியல், பொருளியல், சமூக, மொழி, இனங்கள் மீதான இந்திய தேசியத்தின் ஆக்கிரமிப்பும் பார்ப்பண - பார்ப்பணிய தரகு முதலாளிகளின் ஆதிக்கம் மேலும் இறுக்கமடைந்திருக்கிறது. அதேசமயம் அதற்கெதிரான இன விடுதலை போராட்டமும் வலப்பெற்று வறுகிறது






26.1. தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை

தமிழகத்தின் ஆட்சி மொழியாக இந்தி திணிக்கப்படுகிறது. அடுத்து இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் கோல்லோச்சுகிறது. கல்வி நிலையங்களில் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ் தண்டனைக்குரியதாக, தகுதி குறைவானதாக மாற்றப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பில் ஆங்கிலம் ஒரு தகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் அரசு தனியார் நிர்வாகத்தில் வணிகத்தில் ஆங்கில மொழியே ஆட்சி செலுத்துகிறது. ஊடகங்கள் ஆங்கிலத்தையும் தமிங்கலத்தையும் (தமிழ் + ஆங்கிலம்) பண்பாட்டு உயர்வாக கற்பிக்கிறது. ஆக தமிழகத்தில் ஆங்கிலம் கற்பது ஒரு சமூக தகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. முன்பு சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேரமுடியும் என பார்ப்பணர்கள் செய்த சூழ்ச்சிபோல் இப்பொழுது ஆங்கிலம் தெரியாததுனாலேயே வேலையில்லை, உயர்வில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு தமிழர்கள் ஆங்கிலம் கற்க விரட்டப்படுகிறார்கள். ஏகாதிபத்திய, தரகு முதலாளிய, பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்க நலன்களே இந்நிலைக்கு காரணம். ஓர் இனத்தை அழிக்க அதன் மொழியை அழித்தல் போதுமானது என்பதால்  தமிழ் மொழி ஒடுக்கப்படுகிறது இந்நிலை ஒழிந்து அன்னைத் தமிழ் உரிமை பெறுவதென்பது மொழி, இன, தேசிய போராட்டத்தோடு இணைந்தே உள்ளது.

நம்மை பொறுத்து நமது மொழி கொள்கை என்பது

அ. தமிழே ஆட்சி மொழி, தொடர்பு மொழி, நிர்வாக மொழி என்பது அரசு நிறுவனங்கள் பற்றிய நிலையாகும்.

ஆ. உயர்நீதிமன்றம் தொடர்ந்து கிழமை நீதிமன்றம் வரை தமிழே வழக்கு மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், தீர்ப்பு மொழியாகவும், ஆவண மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் என அனைத்து நிலைகளிலும் தமிழே என்பது நம் நிலையாகும். தமிழ் தெரியாத வழக்காளிகளுக்கு இதில் விளக்குண்டு.

இ. தமிழ்நாட்டில் தனியார் வணிக, தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தமிழையே தங்களின் நிர்வாக மொழியாக, தொடர்பு மொழியாக, ஆவண மொழியாக விளம்பர மொழியாக, குறியீட்டு மொழியாக அனைத்து நிலைகளிலும் தமிழையே பயன்படுத்த வேண்டுமென்பதே நம் நிலையாகும்.

ஈ. ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கொண்ட தாய்மொழி வழிக் கல்வி என்பதே நம் நிலையாகும். அனைத்து தொழில் ஆராய்ச்சி கல்விகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும்.

உ. பார்ப்பனிய-பார்ப்பன மேலாதிக்க மொழியான சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை இங்கு தடைசெய்யப்பட வேண்டும்.

ஊ. வழிபாட்டு இடங்களை பொறுத்த வரை வழிப்படுவோரின் தாய்மொழியிலே வழிபாடு இருக்கவேண்டும் அதே சமயம் அங்கு நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் தமிழே பயன்படுத்த வேண்டும் என்பதே நமது நிலையாகும்.

எ. தமிழகத்தில் தமிழில் வெளிவரும் ஊடகங்களுக்கு ஊக்கமும் பிறமொழி ஊடகங்களுக்கு தேவையான கட்டுபாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஏ. தமிழில் வெளிவரும் ஊடகங்கள் ஆங்கில, தமிங்கில, சமஸ்கிருத பண்பாட்டை, பயன்பாட்டை தொடர்வதை தமிழுக்கும், தமிழருக்கும் எதிரானாதாகவே கருதுகிறோம்..

26.2. இன ஒடுக்குமறை

தமிழ்நாடு 12ம் நூற்றாண்டுக்கு பிறகு பல்வேறு இன மக்களின் குடியேற்ற பகுதியாகவே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களின் அரசியல், பொருளியல், பண்பாடு, சமூகம், தேசம் என அனைத்தின் மீதும் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் விளங்குகிறது.

தமிழ்தேச இறையாண்மை இந்திய தேசியத்தால் பறிக்கப்பட்டுவிட்டது. தமிழர்கள் தங்களின் மொழி, பண்பாடு, தேசியஎல்லை, கடல், தொழில், விவசாயம், பொருளியல், சமூகம், வழிபாடு, இனஉறவு, சர்வதேசஉறவு என அனைத்து நிலைகளிலும் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்சமூகம் சாதிய சமூகமாக, தந்தைமை வழி ஆணாதிக்க சமூகமாக, மூட சமூகமாக விளங்கி வருவதற்கு பார்ப்பன - பார்ப்பனியமே முக்கிய காரணமாக உள்ளது. இவையல்லாத பிற காரணங்களும் உள்ளன.

வரலாற்றுக் ரிதியாக தமிழர்கள் பார்ப்பன - பார்ப்பனிய எதிர்ப்பு சமூகமாகவே விளங்குவதால் பார்பனர்கள் தமிழர்களை வரலாற்று எதிரியாகவே கருதுகிறார்கள். தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் எந்தவித வரைமுறையுமின்றி நடைபெறும் வேற்றின குடியேற்றங்களாலும் அரசு, அரசியல், நிலம், தொழில், வணிகம், வேலைவாய்ப்பு என பல தளங்களிலும் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கம் நிலைபெற்று இருக்கிறது.

தமிழ் இனம் ஏகாதிபத்தியத்தாலும், இந்திய தேசியத்தாலும், தரகு முதலாளிகளாலும், பார்ப்பன - பார்ப்பனித்தாலும் ஒடுக்கப்படுகின்றன. வேற்றின மேலாதிக்கமும் நிலவுகிறது. இந்நிலையில் இருந்து தமிழர்கள் விடுதலைக்காக நம் மீதான ஒடுக்குமுறைகளை ஒழிப்பதும், வேற்றின மேலாதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் கட்டுக்குள் வைத்திருப்பதுமே நமது வழியாக இருக்கும்.

26.3. பொருளியல்

தமிழ் தேசத்தின் பொருளியல் வளங்களின் மீது இந்திய தேசியமே ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் வழியாகவே இங்கு பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் பார்ப்பண - பணியாக்களும் வேற்றினத்தவர்களும் தமிழ் தேசத்தின் பொருளியல் வளங்களை கொள்ளையிட்டு வருகின்றன. இத்தேசத்தில் உள்ள தரகு முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளாகவே உள்ளனர். இங்குள்ள தொழிலாளி வர்க்கம், தேசிய முதலாளித்துவ வர்க்கம், சிறு தொழில் வணிக வர்க்கம் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறது.

27. விடுதலையே தீர்வு

தமிழ் தேசம் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் தேசம், தமிழர்கள் தங்கள் இறையாண்மையை பெற வேண்டுமானால் தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும். விடுதலையல்லாமல் மேலாதிக்க இந்தியாவில் கூட்டாட்சி, தன்னுரிமை என்பவையெல்லாம் இடைவழியே. சுயநிர்ணய உரிமை போன்றவையும் தீர்வாகாது. தாய் மகனிடையே, சகோதரர்களிடையே, கணவன் - மனைவியிடையே சுயநிர்ணய தீர்வு சரியாக உள்ளது. ஆண்டை அடிமைகளிடையே அடிமையாக இருப்பதா, விடுதலை பெறுவதா என இரண்டு தீர்வு இல்லை. அடிமையாக இருக்க எவருக்கும் உரிமை இல்லை ஆக விடுதலை ஒன்றே தீர்வாக அமையும். இந்திய மேலாதிக்க அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகம் விடுதலை பெறுவதே தீர்வு. தமிழ் தேசிய சிக்கல் என்பது சாரம்சத்தில் தமிழர்களின் தேசிய சிக்கலே! தமிழ் தேசத்தை தாயகமாக கொண்ட மொழி, இன, சிறுபான்மை மக்கள் இத்தேச குடிமக்களே! தமிழ் தேசம் என்பது அதன் இழக்கப்பட்ட எல்லைகளையும் புதுச்சேரி, காரைக்கால், கச்ச தீவு ஆகியவையே.


28. தமிழ் தேசத்தின் முரண்பாடுகள்


அகமுரண்பாடுகள்


28.1. வர்க்க முரண்பாடுகள்

பாட்டாளி வர்க்கம், கூலி விவசாய வர்க்கம், அமைப்புசாரா தொழிலாளி வர்க்கம், சிறுமுதலாளிய வர்க்கம், பணக்கார, நடுத்தர, சிறு விவசாய வர்க்கம், தேசிய முதலாளிய வர்க்கம், நிலவுடமை வர்க்கம், தரகு முதலாளித்துவ வர்க்கம் ஆகிய வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடும்.

28.2. இன முரண்பாடுகள்

தமிழர், பார்பணர், தெலுங்கு, கன்னட, மலையாள, குஜராத்தி, பஞ்சாபி, இந்தி, வங்காளி, சிந்தி ஆகிய இனங்களுக்கிடையேயான முரண்பாடும்.

28.3. சாதிய முரண்பாடுகள்

பிறப்பு அடிப்படையில் வேறுபாடு கொண்ட, அகமண முறையில் அமைந்த, ஒன்றின் மீது ஒன்றாகவும், அக்கம் பக்கமாகவும், மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் குறுகி செல்லும் வடிவத்தைக் கொண்டதாகவும் மேல் உள்ள சாதிக்கு ஆண்டையும் கீழ் உள்ள சாதிக்கு அடிமையும் இல்லாத அதே சமயத்தில் அதற்குள் உள்ள நிலைமை தனக்குமேல் உள்ள சாதிக்கு அடிமையாகவும், தனக்கு கீழ் உள்ள சாதிக்கு ஆண்டையாகவும் ஒரே நேரத்தில் இரண்டு தன்மைகளை கொண்ட பலநூறு சாதிகளை கொண்டதே தமிழ்ச்சமூகம்.

28.4. அ. தீண்டாமை, காணாமை கொடுமைகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலையை முதன்மையாக எந்த சாதி ஒழிப்புப் போராட்டமும் சாதியை ஒழிக்காது. அதே சமயம் தாழ்த்தப்பட்டவர்கள் தனியே விடுதலை பெறுவது என்பதும் சாத்தியம் இல்லை.

ஆ. பார்ப்பன - பார்ப்பனியத்தை, இந்து அடிப்படைவாத  இந்திய தேசியத்தை, பார்ப்பனிய நிலவுடமையை தரகு முதலாளித்துவத்தை அதற்கு துணையாக உள்ள அரசு அதிகாரத்தை இலக்காக்கி தாழ்த்தப்பட்டவர்கள் சூத்திரர்கள் பிற சனநாயக ஆற்றல்களை அணிதிரட்டுவதும் அத்தகைய அணிதிரட்டல் சமத்துவத்தை, விடுதலையை அடிப்படையாகக் கொண்டதாக தாழ்த்தப்பட்டோர் விடுதலையை உறுதி செய்வதாக விளங்க வேண்டும். இதுவே சாதியை ஒழிக்க வழி.

இ. இவ்வகையில் இல்லாமல் பார்ப்பனர், தாழ்த்தப்பட்டோர் கூட்டை முன்வைப்பது சூத்திர சாதிகளை இலக்காக்குவது. சூத்திர சாதிகளை ஆதிக்க சாதிகளாக வரையறுப்பது சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டோர் கூட்டை மறுப்பது, பார்ப்பன - பார்பனியத்தை இலக்காக்க மறுப்பது இவை அனைத்துமே பார்ப்பன - பார்ப்பனியத்திற்கு சேவை செய்யும் பார்பனிய கருத்தியலே. இது பார்ப்பன - பார்ப்பனியத்தை காப்பதோடு சாதியை ஒழிக்க மறுத்து சூத்திர, தாழ்த்தப்பட்ட சாதிகளிடையே மோதலை உருவாக்கி ஒடுக்கபட்ட சாதிகளில் பார்பனிய சக்திகளை உருவாக்கி சாதிய சமூகத்தை பாதுகாக்கிறது.

ஈ. சாதி அடிப்படையிலான இந்திய அளவிலான ஒருங்கிணைப்புகள் உயர்சாதி தொடங்கி தாழ்த்தப்பட்ட சாதி வரை நடைபெறுகிற அனைத்துமே தேசிய விடுதலையை ஏற்கவில்லை என்றால் சாதியை பாதுகாப்பதற்கான பார்ப்பனிய இந்திய தேசியத்தை பாதுகாப்பதற்கான கருத்தியல் நடைமுறையாகவே மட்டுமே அவை அமையும். அக்கண்ணோட்டம் பிழைப்புவாதிகளையும் ஒடுக்கப்பட்ட சாதிகளில்   பார்ப்பனிய இந்திய ஒட்டு ஆளும் வர்க்கத்தையும், சந்தர்ப்பவாதிகளையும், ஆகிய சாதிய பாதுகாவலர்களையே உருவாக்கும்.

உ. பெரும்பான்மை சாதிகளின் இடையில் சிக்கிய சிறு எண்ணிக்கைகளை கொண்ட சாதிகள் தனது பாதுகாப்பிற்காகவும், ஆதிக்கத்திற்காகவும் இந்திய சாதிய பட்டங்களில் தங்களை இணைத்து அடையாளங்காண்பது சாதியை ஒழிப்பதற்கு பதில் அவற்றுக்கு இந்திய அடிப்படையை உருவாக்குவது. சாதிய சமூகத்தை பாதுகாப்பதற்கான பார்ப்பனிய கருத்தியலே. அது சிறு எண்ணிக்கைகளை கொண்ட சாதிகளின் சனநாயக உரிமையை பாதுகாப்பதும் இல்லை. சாதியை ஒழிப்பதும் இல்லை.

ஆக இதில் இந்தியத்தேசம் x பார்ப்பனிய நிலவுடைமை x பார்ப்பனர் x சூத்திரர் x தாழ்த்தப்பட்ட சாதிகள் ஆகியவற்றிக்கு இடையிலான முரண்பாடும், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் உள்ள முரண்பாடும் நிலவுகிறது.

28.5. பெண்கள்

இச்சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கும் ஒடுக்கும் தந்தைமை வழிபட்ட பார்ப்பனிய நிலவுடமை சமுதாயத்திற்கும் பெண்களுக்கு இடையிலான முரண்பாடு.


28.6. பழங்குடி, பழங்குடியல்லாதவர்களுக்கு இடையிலான முரண்பாடு



28.7. இந்து மதம் x இஸ்லாம் x கிறிஸ்துவம் x மதமற்றோர் ஆகியவர்களுக்கு இடையிலான முரண்பாடு



28.8. நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடையிலான முரண்பாடு


மேற்கண்ட அக முரண்பாடுகளின் தொகுப்பாகவே தமிழ் சமூகம் உள்ளது.



தமிழ்ச்சமூகத்தின் புறமுரண்பாடுகள்


28.9. ஏகாதிபத்தியத்திற்கும் x தமிழ் தேசியத்திற்கும் - மக்களுக்கும்
இந்திய தேசியத்திற்கும் x தமிழ் தேசியத்திற்கும்
தரகு முதலாளிகளும் x தமிழ் தேசியத்திற்கும்
பார்ப்பண-பணியாக்களும் x தமிழ் தேசியத்திற்கும்
அண்டை தேசங்களுக்கும் x தமிழ் தேசியத்திற்கும்
இலங்கைக்கும் x தமிழ் தேசியத்திற்கும்
சீனாவிற்கும் x தமிழ் தேசியத்திற்கும்


29. தமிழ் தேசத்தின் முரண்பாட்டுத் தொகுப்புகள்

தமிழ் தேசத்தின் அக, புற முரண்பாடுகளை மூன்று தொகுப்புகளாக வகைப்படுத்தலாம்.

முதல் தொகுப்பு முரண்பாடுகள்


ஏகாதிபத்தியத்திற்கும் x தமிழ் தேசியத்திற்கும் - மக்களுக்கும்
இந்திய தேசியத்திற்கும் x  தமிழ் தேசியத்திற்கும்
இந்திய, தமிழக  தரகு x  தமிழ் தேசியத்திற்கும் - மக்களுக்கும்
      முதலாளிகளும்
நிலவுடமைக்கும் x  தமிழ் தேசியத்திற்கும் - மக்களுக்கும்
பார்ப்பனித்திற்கும் x  தமிழ் தேசியத்திற்கும் - மக்களுக்கும்
இலங்கைக்கும் x  தமிழ் தேசியத்திற்கும்


இப்பகைத் தன்மை உள்ள முரண்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டிய முரண்பாடுகள்.

இரண்டாம் தொகுப்பு முரண்பாடுகள்

1. பார்ப்பனர் x  தமிழ்த் தேசம், தமிழர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள்,     பெண்கள்

2. அண்டை தேசங்கள் x  தமிழ்த் தேசம்

3. தமிழ்த் தேசத்தில் உள்ள வேற்றின ஆளும் வர்க்கம் x  தமிழர்கள்

4. தேசிய முதலாளிகளுக்கும் x  பாட்டாளிகளுக்கும் x  பணக்கார விவசாயிகளுக்கும்     x கூலி விவசாயிகளுக்கும்

5. தமிழகத்தில் உள்ள இந்து மதத்திற்கும் x  இதர மதத்திற்கும், மதமற்றார்களுக்கும்

6. பழங்குடிகள் x  பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள்.

    இரண்டாம் தொகுப்பு முரண்பாடுகள் தீர்வுகாணப்படவெண்டிய எதிர்ப்புக்குரிய    முரண்பாடுகள் ஆகும்.

மூன்றாம் தொகுப்பு முரண்பாடுகள்

பாட்டாளி வர்க்கம், கூலி விவசாய வர்க்கம், அமைப்புசார தொழிலாளி வர்க்கம், சிறு முதலாளி வர்க்கம், பணக்கார நடுத்தர சிறு விவசாயி வர்க்கம், தேசிய முதலாளிய வர்க்கம்,  தாழ்த்தப்பட்டவர்கள்  சூத்திரர்கள், பெண்கள், பழங்குடிகள், சிறுபான்மை மொழி, இன, மத மக்கள், ஆகியோர் இந்த மூன்றாம் தொகுப்பில் உள்ளவர்கள்.

மூன்றாம் தொகுப்பில் உள்ள வர்க்கங்கள், இனங்கள், சமூகப் பிரிவுகள் முதலாம் தொகுப்பில் உள்ள வர்க்கங்கள், நாடுகள், சமூக பிரிவுகளின் மீதான பகை ஆதிக்க ஒழிப்பு போராட்டத்தில் ஊன்றி இரண்டாம் தொகுப்பில் உள்ள முரண்பாடுகளை நிர்பந்திப்பது (ஒழிப்பது அல்ல) மூலம் முதலாம் தொகுப்பில் உள்ள முரண்பாடுகள் ஒழிக்கப்படுவது இரண்டாம் தொகுப்பு முரண்பாடுகள் தீர்வுகாணப்பட வேண்டியதும் இந்நிகழ்வு போக்கில் மூன்றாம் தொகுப்பில் உள்ள உள் முரண்பாடுகள் களையப் பெறுவதும் நிகழ்ந்தேறும். இந்த வகையில் இல்லாமல் மூன்றாம் தொகுப்பு உள் முரண்பாடுகளுக்கு முதன்மை அளிப்பதோ இரண்டாம் தொகுப்பு முரண்பாடுகளுக்கு முதன்மை அளிப்பதோ விடுதலையை ஒழித்து மூன்றாம் தொகுப்பு முரண்பாடுகளுக்கு சேவைச்செய்வதாகவே அமைகின்றது. அதே வகையில் முதலாம் தொகுப்பு முரண்பாட்டில் மட்டும் கவனம் செலுத்துவது இரண்டாம் தொகுப்பு முரண்பாடுகளை எதிர்ப்புக்குட்படுத்தாமல் இருப்பதும் முதன்மை தொகுப்பு முரண்பாட்டை ஒழிக்க உதவாது.

30. முரண்பாடுகளை பற்றிய நமது கண்ணோட்டம்

இந்த முரண்பாடுகளை பற்றிய பரிசீலனை பொதுவானவையே. இந்த முரண்பாட்டுத்தொகுப்பில் உள்ள வர்க்கங்கள், நாடுகள், இனங்கள், சாதிகள், பெண்கள், பழங்குடிகளின் நிகழ்கால நிலைப்பற்றியும் விடுதலைப்பற்றயும் குறிப்பாக என்ன தன்மையை, வடிவத்தை, உறவுகளை பெற்று விளங்குகிறது என்பதை பற்றிய திட்டவட்டமான ஆய்வு ஏதும் இல்லை என்பதும் இவற்றை பற்றிய திட்டவட்டமான ஆய்வே நமக்கு குறிப்பான திட்டத்தை வழங்கும். அதுவே திட்டவட்டமான சிக்கலுக்கு திட்டவட்டமான தீர்வை வழங்கி நம்மை பாய்ச்சலுக்குத் தள்ளும். ஆகவே இப்பொதுகண்ணோட்டத்தில் இருந்து நாம் குறிப்பானதைநோக்கி பயணப்படவேண்டும். நாம் பொதுக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான அமைப்பு நடைமுறையையும் குறிப்பான கண்ணோட்டத்தை நோக்கிய ஆய்வு நடைமுறையையும் கொள்ள வேண்டும். நாம் இரு கால்களால் நடக்க வேண்டும். ஆய்வு மற்றும் நடைமுறை. இன்றைய நிலையில் இம்முரண்பாடுகள் தேசிய சனநாயக புரட்சி மூலமாகவும் இறுதியாக சோசலிச புரட்சி மூலமாகவும் தீர்வு பெறும். ஆகவே நம் விடுதலைக்குரிய கோட்பாடுகள் தேசியம், சனநாயகம், சோசலிசம் என்பவையே.

31. வழிகுறித்து

படையால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், போரால் சிக்கலுக்கு தீர்வு காண்பதும் புரட்சியின் நடுவன் கடமையும் மிக்குயர் வடிவமும் ஆகும், புரட்சி பற்றிய இந்த மா.லெ. கோட்பாடு சீனத்திற்கு மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் பொருந்த கூடியதாகும்.  தோழர் மா.வோ.வின் இக்கருத்து ஒரு பொது உண்மையாகும்.  இப்பொதுக்கருத்தையே எமக்குரிய பொது வழியாக ஏற்கிறோம்.  அதே சமயம் திட்டவட்டமான ஆய்வுக்குப் பிறகே நமக்கான குறிப்பான வழி உருவாக்கப்படும்.

இப்பொதுவழியின் கண்ணோட்டத்தில் உழைக்கும் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தலைமையில் சுரண்டப்படும் ஒடுக்கப்படும் வர்க்கங்கள், பிரிவினர்கள், மொழி, இன, சிறுபான்மையினர், பழங்குடிகள், பெண்கள் ஐக்கியப்பட்டு மக்கள் திரள் வழியே காலம் கோறும் அக புற நிலைக்கேற்ற போராட்ட வடிவத்தை மேற்கொள்வதன் வழியாகவே தமிழ் தேச, சனநாயக விடுதலையை உலக தமிழர்கள், ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் தேசங்களின் ஆதரவோடு சாத்தியப்படுத்த முடியும்.

32. தேர்தல் பாதை குறித்து

தேர்தல் பாதை என்பது ஒரு செயல் உக்தியே என்ற போதிலும் இந்திய பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பது என்பது தேச விடுதலை சனநாயக லட்சியத்திற்கு உதவாது என்பதோடு அதற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகையால் இன்றைய நிலையில் தேர்தலை புறக்கணித்து அம்பலப்படுத்துவது நமது நிலையாகும்.

33. வழிகாட்டும் கண்ணோட்டம்

நாம் மார்க்ஸிய - லெனினிய - மாவோவிய பெரியாரிய வழிவந்தவர்கள் அவர்களின் வழியில். இயக்கவியலை தனது வழிகாட்டும் கண்ணோட்டமாக கொள்பவர்கள். அதன் அடிப்படையில் தமது தேசிய, சமூக நிலைக்கு புதிய கோட்பாட்டு உருவாக்கத்தை கோறுபவர்கள் அதற்கான 'கண்ணோட்டம்' நடைமுறை உடையவர்கள்.

மா.லெ.மா கண்ணோட்டம் என இருந்து வரும் நிலையில் நாம் ஏன் இயக்கவியலை முன் வைக்கிறோம். மா.லெ.மா என்பது எங்கும் தழுவிய முரண்பாட்டையும் குறித்த முரண்பாட்டையும் விளக்கும் தீர்க்கும் அறிவியலாக உள்ளது. இவற்றில் எங்கும் தழுவிய முரண்பாட்டை பற்றி அவர்களின் அறிவியல் எங்கும் எப்பொழுதும் யாவருக்கும் உரியதே (சார்பற்றது) அதேச்சமயம் குறித்த முரண்பாட்டை பற்றிய விளக்கத்திற்கு காலமும் இடமும் எல்லைகளாக உள்ளது (சார்புள்ளது). அதன் அடிப்படையிலே மார்க்ஸியத்தின் பொது சாராம்சத்தை கொண்டு வேறு ஒரு காலத்தின் இடத்தின் குறிப்பான தேவைகளும் இணைந்து லெனினியம் உருவாகியது. அதன் வழியிலேயே மாவோயிசமும் இலத்தின் அமெரிக்காவில் “சே” வழியும் இந்தோசீனாவில் ஹோசிமின் வழியும் வளர்ந்தன. அதன் வழியிலே தான் இன்று பெருவில் கன்சாலோ சிந்தனையும் நேபாளத்தில் பிரச்சந்தா வழியும் உருவாகி இருக்கிறது. மா.லெ.ம. வழிகாட்டும் தத்துவம் என்று நாம் அழைக்கும் பொழுது அதனுடைய பொது மற்றும் குறிப்பான இரண்டுமே நமக்கு வழிகாட்டும் நிலைக்கு வந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக மூன்றாவது அகிலம் தொடங்கி மா.லெ வில் உள்ள குறிப்பான கோட்பாடுகளே உலக இடதுசாரி இயக்கத்தை ஆதிக்கம் செலுத்துகிறது. அது வரட்டு வாதத்திற்கு வாய்ப்பாக உள்ளது. அது குறிப்பான புறநிலைகளை ஆய்வுச்செய்யாமல் ஆசான்களின் புத்தகங்களை தேடச் செல்கிறது. இதனுடனான போராட்டத்திலேயே மாவோயிசம் பிறந்தது. இந்த வகையில் இல்லாமல் குறிப்பான நிலைக்கு மா.லெ.மா வை பொருத்துவது, ஒருங்கிணைப்பது, ஒன்றிணைப்பது (இச்சொற்களே எந்திரவியல் கதியானது) என்பது குறிப்பான நிலைக்கு புதிய கோட்பாட்டு உருவாக்கத்தை மறுப்பது புறநிலையை பார்க்க மறுத்த அகநிலை கருத்து முதல்வாத எந்திரவியல் தன்மை கொண்டது.

அதே போல் மார்க்ஸிய + பெரியாரியம் + அம்பேத்காரியம் என்பதும் எந்திரவியல் சமண்பாடே. (இவற்றின் சாரம் என்ன என்று சொல்வதே சரியானது). மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்: மார்க்ஸியம் ஒன்று தான் அதன் அனைத்தும் தழுவிய விதிகள் குறிப்பான (காலத்திலும், இடத்திலும்) மண்ணுடன் இணையும் பொழுது மார்க்ஸியத்தின் அனைத்தும் தழுவிய விதிகளை சாரமாக கொண்ட புதிய கோட்பாடு உருவாகிறது. மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் அல்ல. ஆக இக்கண்ணோட்டமும் எந்திரவியல் தன்மை கொண்டது.

இந்த வகையில் நிலவும் எந்திரவியல் அகநிலை கருத்து முதல்வாத கண்ணோட்டமே நாம் இயங்கியலை முன்வைப்பதற்கான தேவையை ஏற்படுத்துகிறது. இது மார்க்ஸியத்திற்கு மாற்று அல்ல. இதுவே மார்க்ஸிய கண்ணோட்டம். ஆக இங்கு இயங்கியல் கண்ணோட்டத்தில் முரண்பாடுகளோடு நடக்கும்,நடத்தும் போராட்டத்தில் உருவாகும் புதிய கோட்பாடே நம் குறிப்பான நிலைகளுக்கான குறிப்பான வழிகாட்டுதலாக அமையப் பெறும். மருத்துவத்தில் பொது மருத்துவத்திலிருந்து கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், நரம்பியல் மூளைக்கான மருத்துவம் என்று பல மருத்துவத்துறைகள் வளருவது போல் புதிய நிலைகளுக்கான புதிய கோட்பாடுகள் உருவாக வேண்டும். அவற்றின் பொதுச்சாரம் மார்க்ஸியம் தான். அதில் குறிப்பானதும் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். கண் மருத்துவரை நாம் மருத்துவர் என பொதுவாக மட்டும் அழைப்பதில்லை. (அழைக்க முடியாது அப்படி அழைத்தால் புறநிலை வளர்ந்த அளவுக்கு அவர் வளரவில்லை என்று பொருள்). கண் மருத்துவர் என்றே அழைக்கிறோம். மார்க்ஸியத்தின் மிக அடிப்படையானது திட்டவட்டமான நிலைகளை பற்றி திட்டவட்டமான ஆய்வே என தோழர் லெனின் கூறுகிறார். நாம் அந்த வழியிலேயே பயணிக்கிறோம்.

மா.லெ.மா. வரலாற்று வழியில் வந்தவர்கள் என்பதோடு பெரியாரியல் இணைந்தது ஏன் மா.லெ.மா. பொது உட்சாரத்தை நாம் ஏற்பது போல் பெரியாரி பொது உட்சாரத்தை (தமிழ் தேசத்தின் குறிப்பான சாரம்) ஏற்கிறோம். அவற்றின் சாரம் என்பது தமிழ் தேச விடுதலை பார்ப்பண - பார்ப்பணிய எதிர்ப்பு சாதி ஒழிப்பு, பெண்கள் விடுதலை என்பவையாகவே உள்ளன. அவரின் இத்தன்மையானது இயங்கியல் பூர்வமானது. அவரை நாம் சீர்திருத்த வாதியாக அல்ல. சமூக புரட்சியாளராகவே ஏற்கிறோம். அவரை நாம் ஏன் முழு வழிகாட்டியாக கொள்ளவில்லை? சமூக தளத்தில் அவர் புரட்சியாளராக விளங்கும் அதே நேரத்தில் வர்க்க தளம் தேசிய விடுதலை, அரசு அதிகாரத்தை கைபற்றுவது, விடுதலைக்கான வழி குறித்த அவரின் கருத்துக்கள் போதாமையாகவே உள்ளது. அவருக்கு பிறகான காலமும் முக்கிய விடையமாக உள்ளன. ஆக இப்போதாமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழர்கள், தமிழ்த் தேசத்தின் குறிப்பான நிலைக்கான கோட்பாட்டை கோருவதற்காகவே நாம் நமது  வழிகாட்டும் கண்ணோட்டமாக இயங்கியலை முன்வைக்கிறோம். இக்கண்ணோட்டம் (இயங்கியலை வழிகாட்டும் கண்ணோட்டமாக முன்வைப்பது) சர்வதேசத்திற்கும் பொருந்தக்கூடிய பொதுக்கண்ணோட்டமே.

34. அமைப்பு குறித்து

நாம் ஒருங்கிணைக்கும் அமைப்பு சர்வதேசஅளவில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும், உலக சோசலிசபுரட்சிக்காக போராடக்கூடிய அமைப்பாகவும் அதேசமயம் தேசியவிடுதலை சனநாயகபுரட்சிக்கான அமைப்பாகவும் செயலாற்றும். வடிவஅளவில் சர்வதேசிய, தேசிய வடிவத்தை ஒருங்கே பெற்ற, தன்மைஅளவில் சோசலிச, சனநாயக தேசிய உள்ளடக்கத்தை கொண்ட அமைப்பாகவே விளங்கும்.

35. இத்திட்டவரைவை செயலாக்க தமிழர் குடியரசு முன்னணி தன்னை அர்பனித்துக் கொள்கிறது. இதை ஏற்று செயலாற்ற விரும்பும் தமிழர்கள் உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.


மூன்று கோட்பாடுகள்

1. தேசியம்
2. சனநாயகம்
3. சோசலிசம்

தமிழ் ஈழம்
மொழி, இன, சிறுபான்மை தமிழர்கள்
பன்னாட்டு தமிழர்கள்

No comments:

Post a Comment